Saturday, 5 September 2020

நான் யார் பக்கம் (தொடர்-5) - நெடுந்தொடர்

                         

                                       நான் யார் பக்கம் - ஜெய்முருகன்


தொடர்... 5

ரோஜாவை பார்ப்பதற்கு அவளின் 'ஊருக்கு சென்றவன்' அவளை எப்படி! பார்ப்பது என்று தெரியாமல்? அக்கிருந்த டீ-கடையில் நின்றுபடியே..! யோசித்தான்.. நேரா அவ வீட்டுக்கே! போயிடலாம், ஆனா அத மாமா பேச்சுவாக்கில நம்ம வீட்ல போட்டுகொடுத்துட்டாருனா! அதுக்கப்புரம் நாம! பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம். என்னா! பன்னலாம் என யோசித்தவாறே, கடையில் டீய குடித்துவிட்டு வண்டியை தள்ளியவாறே ஊருக்கு வெளியே நடந்துகொண்டிருந்தான்..  


ச்சே!.. நேத்தே! அவ "நெம்பர வாங்கிருந்தா"  இன்நேரத்துக்கு இப்படி அவஸ்த்தபட 'தேவையில்லை என பேசியவாறே நடக்க' அப்போது அவனுடைய "போன் அலறும் சத்தம்" கேட்டது. 

இருக்குற கடுப்புல இதுவேற என போனை எடுத்து "ஹலோ" என்றான். 

போனின் எதிர்முனையில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை, கோபம் தலைக்கேறி "ஹலோ" என சத்தமாக கத்தினான். 

"நான்தான்" என மெல்லிய குரலில் எதிர்முனையில் இருந்து சத்தம் கேட்டது. குட்டிக்கு, பேசுறது யார் என தெரித்தது. அதன்பின் அவனின் கோபம் முற்றிலும் கலைந்து 'சந்தோஷத்தில' என்ன செய்வதென்றே புரியாமல் வண்டியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, அருகில் இருந்த மரத்தடிக்கு சென்று.. யாருனு தெரியாதமாதிரி "நான்தான்னு" சொன்னவங்களுக்கு பேர் இன்னும் வைக்கலயா? என்றான்.

"ரோஜாவும் "அவனுக்கு ஈடாக! பேர் மட்டும் போதுமா.. இல்ல வேறா! ஏதாவது தகவல் வேனுமா!  என தன் குரலை கம்பீரமாக்கினாள். 

இப்போதைக்கு பேர் மட்டும் 'தெரிஞ்சா போதும்' மத்தத..நேரம் வரும்போது தெரிஞ்சிக்கலாம். என இவனும் அதே தோனியில் பேசினான். 

"பேர் மட்டும் தெரிஞ்சிக்கவா" இவ்வளவு தூரம் வந்தீங்க.! 

அதுவந்து, அது நான் இங்க வந்தது.. உங்களுக்கு எப்படி தெரியும்! என பேசமுடியாமல் தல்லாடினான்... 

எல்லாம் தெரியும் "மயில்கலர் சட்ட சந்தனகலர் பேண்ட்" அது நீங்கதானே! என சிரிந்தாள்... 


"என்னங்க, எப்படி! என வேகமாக" கேட்டான்.

நீங்க "டீ-கடையில" இருக்கும்போது கொஞ்சம் நகருங்க சாருனு.. 'செவப்புகலர் நைட்டில' ஒரு பொன்னு சொன்னாங்களா?

ஆமா! 

"அது நான்தான்" பால்வாங்க வந்தேன்.. உங்கள பாத்ததும் கொஞ்சநேரத்திக்கு "மாறுவேசத்துக்கு மாறிட்டேன்" என சிரிந்தாள்... 

அட ச்சே! "அது நீங்கதானா" அப்பவே என் உள்மனசு சொல்லிச்சு.. 'சிக்னல் அதிகமா இருக்கு' உனக்கான "நெட்வொர்க்" ரொம்ப பக்கத்தில இங்கதா எங்கோ இருக்குனு... 

அதெல்லாம் இருக்கட்டும் எதுக்கு? இங்க வந்தீங்க... 

என்னாங்க எதுவும் தெரியாதமாதிரி பேசறீங்க...

"எல்லாம் தெரியும்" எங்காளுங்களுக்கு தெரிஞ்சா அவ்வளுவுதான் கிளம்புங்க..

என்னங்க "ரெண்டே ரெண்டு நிமசம்" சும்மா பாத்துட்டு ஹாய் சொல்லிட்டு 'கிளிம்பிடுவோம்' என அடம்பிடித்தான்... 

சரி.. சரி.. இருங்க வரேன். 

"சீக்கிரம் வாங்க ஊருக்கு வெளியே இருக்கேன்" என சத்தமிட்டான்.

ம்ம்ம்... என போனை வைத்தாள். 

சிறிது நேரத்தில் ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள்.. அதே "சிவப்பு பூ போட்ட நைட்டி" 'ஒழுங்கா வாறாத தலைமுடி' அலங்காராம் இல்லா முகம்... என அனைத்தையும் பார்த்து அலங்காரத்தில பார்த்ததை விட ஆயிரமடங்கு அழகு என வர்ணித்தான்... 

"என்ன சொன்னீங்க"

'ஒன்னுமில்ல' "டீ -கடையில" பார்த்தும் நீங்க ஏன் எங்கிட்ட பேசல...

அது ஒன்னுமில்ல நீங்க "என்னதான் செய்யபோறிங்கனு பாக்கலாமேனு வெயிட் பன்னேன்" சும்மா ஒரு ஜாலிக்கு..
அப்புறம் நீங்க கிளம்புரத பாத்தேன். "மனசு கேக்கல" அத்தான் போன் பன்னினேன்... நீங்க வண்டியை தள்ளீட்டு போகும்போது "உங்க முகத்த பாக்குனுமே"  ஜயோ! பாவம்.. என்று கலாத்தபடி சிரிந்தாள்...


ரோஜா சிரிக்கும் அழகை பார்த்து குட்டியும் மெதுவாக சிரிக்க 'ஒருவரையொருவர் பார்த்து' இரசித்துகொண்டனர். 

சிரிப்பு சத்தம் சிறிது குறையவே.. அவளை பாத்து "sorry ங்க என்ன மன்னிச்சிடுங்க" என்றான். 

LOVE STORY

எதுக்கு... 

இல்ல எத்தன முறை நீங்க இதேமாதிரி என்ன பாக்க எங்கூருக்கு வந்து ஏமாத்திருப்பீங்க அதுக்குதான்.. 

அய்யோ! ஆசையை பாரு.. நான் உங்கள பாக்க வந்ததா யார்? சொன்னது. நான் "என் அத்தையும், அவங்க இருக்கிற வீட்டையும்" பாக்கத்தான் வந்தேனே தவிர உங்கள பாக்க இல்ல.. 

சரிங்க.. அப்படியே இருக்கட்டும்.. ஆனா! நீங்க.. என் வீட்ட பாக்க வரும்போதும் நான் உங்கள பாக்காம போய்ட்டேனே.. அத நெனச்சாதான் எனக்கே கொஞ்சம் அசிங்கமா இருக்கு...

 
கொஞ்சம் சிரித்தவள்... உங்கள தேடி வந்த என்ன மட்டுமில்ல "நீங்க எந்த பொண்ணையும்" பாத்ததில்லை.. 

யார் சொன்னது.. 'அப்படியெல்லாம் ஒன்னுமில்ல' நான் யாரையும் பாக்கமாட்டேனு  உங்களுக்கு யார்? சொன்னது. 

"யாரும் சொல்ல வேண்டியதில்ல" நீங்க போடுற 'டிரஸ்சே' உங்கள காட்டிகொடுத்திடும்... அதுலே தெரியுது நீங்க.. யாரையும் 'பாக்கபோறதில்ல உங்களையும் யாரும் பாக்கபோறதில்லேனு' என சிரித்தாள். 

என்னா! டேஸ்ட் இது "பார்டி பிளஸ்ல" உள்ளவங்க போடுறமாதிரி எனக்கு சுத்தாமா புடிக்கல. 

அப்படியா சொல்ற இனிமேல் பாரு... நம்ம டிரஸ்ஸ.. நாம பன்ற ஸ்டைல பாத்து  'வயசு பொண்ணுங்கல இருந்து வயசான ஆய வரைக்கும்' சும்மா நம்ள பாத்து எப்படி வழியுறாங்கனு.. 

உங்களுக்கு.. அப்படி ஒரு ஆச இருந்தா அத இப்பவே உங்க 'பழைய டிரஸ்ஷோட சேத்து தீ வச்சி' கொழுத்திடுங்க..  என கோவப்பட்டாள். 

"அய்யோ அம்மா" நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னே உன் கோபத்தை கொஞ்சம் கொரச்சிங்கோ தாயே. 

அவளும் சற்று அமைதியாக.. கோவத்துல உங்க கண்ணம்.. செவத்தாலும் நல்லாயிருக்கே என கொஞ்சினான். 

ம்ம்ம்... அப்படியா "அப்போ உங்க கண்ணமும் செவத்தா" எப்பிடியிருக்குனு பாப்போமா. 

"இல்லிங்க அதெல்லாம் வேண்டாம்" இது சிவக்காமலே நல்லா இருக்கட்டும் என பின்னே நோக்கி நடந்தான்.. 

"எங்க போறிங்க வாங்க எதுவும் செய்யமாட்டேன்" என கையை பிடித்து இழுந்தாள். 

அவளின் கைபட்ட சந்தோஷத்தில் இவனுக்கோ எல்லாம் தலைகீழாக மாறியது... அதே வேகத்தில்  அவள் கையை பிடித்துவிடலாம்னு என நினைத்து "அவள் கை அருகே இவன் கையை கொண்டுசெல்ல" அதற்குள்ள அவள் தன் கைய எடுத்து இதெல்லாம் எங்கிட்ட நடக்காது என்றாள். 

"ச்சே.. ஜெஸ்டு மிஸ்" என நொச்சுகொட்டினான். 

இதை பாத்து அவள் சிரிந்தாள்.  அவளின் இந்த சிரிப்பை குட்டி இரசிக்க இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேராக பார்த்துகொண்டிருந்தனர். 


அந்தநேரம் பார்த்து "ரோஜாவின் போன்" சத்தமிட்டது. ரோஜா போனை எடுத்ததும் எங்கடி போன.. இங்க இருக்குற கடைக்கு எவ்வளவு நேரம் என கூச்சிட்டாள் ரோஜாவின் அம்மா.. 

இதே "வந்துட்டடே" ம்மா..

சீக்கிரம் வாடி.. கொறச்சிலுக்கு உங்கொப்பன் 'போன வேற எடுத்துட்டு போய்ட' அவர் வேற சத்தம் போடுறாறு..

"இதோ, இதோ வந்துட்டேன்" என போனை வைத்தாள்.

சரிங்க.. 'நான் கிளம்புறோன்' கொஞ்சம் வேல இருக்கு என வண்டியில் அமர்ந்தாள்..

குட்டி! மறுபடியும் எப்ப என வேகமாக கேட்டான்.. 

"போன் பன்னுங்க" சொல்றேன்.. 

அவ்ளவுதானே இதோ 'இப்பவே பன்னுறேனு' என போனை எடுத்தான்.. 

ஹலோ! 'அது எங்கப்பா நெம்பர்' என் நெம்பருக்கு கால் பன்னுங்க சொல்றேன்..

எது உங்கப்பா நெம்பரா.. "என்னங்கா உங்க நெம்பர சொல்லிட்டு" போங்க என அவள் வண்டியை பிடித்தான்.. 

முடிஞ்சா கண்டுபிடிங்க.. அதுவரைக்கும் நான் என் 'நெம்பர்ல இருந்து உங்களுக்கு போன் பன்னமாட்டேன்' என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். 

என்னாங்க "பெட்டா இன்னும் ரெண்டு மணி நேரத்தில" உங்க நெம்பருக்கு போன் வரும் ரெடியா இருங்க.. என சவால் விட்டான். 

அவளும் வண்டியை ஒட்டியபடியே வண்டியில் உள்ள "மிரரில் குட்டியை பார்த்து" சிரித்தபடியே அங்கிருந்து மறைந்தாள். 


குட்டியும்!  கண்ணாடியில் தெரிந்த "அவளின் சிரிப்பை பாத்தபடியே" நின்றுகொண்டிருக்க அவள் மறைந்தும்.. சந்தோஷமாக "பாட்டு பாடியபடியே" அங்கிருந்து புறப்பட்டு சென்றான்....
                    

                                                                                                          தொடரும்......6


No comments:

Post a Comment