Monday, 21 September 2020

அவசர உலகில் மாட்டிகொண்ட ஆறு வயது ஆண்.


அவசர உலகில் மாட்டிகொண்ட ஆறு வயது ஆண் -- ஜெய்முருகன்

டே ... இன்னும் என்னடா தூக்கம் சீக்கீரம் எந்திரு நேரமாச்சி என காலை ஐந்து மணிக்கே ஜந்து முறை அலாரம் வைத்து சரத்தை எழுப்பினாள் அவனின் அம்மா ஜானகி. 

"அம்மாவின் அதற்றலை கேட்டு திக்கிட்டு எழுத்தான் சரத்." உனக்கு இன்னும் என்னடா தூக்கம் சீக்கிரம் எழுந்து வந்து 'நைட்டு பாதியிலே விட்ட பாடத்தை சீக்கிரம் எழுது. 

உனக்கு எத்தன முறை சொல்லிருக்கேன் நைட்டு ஒன்னுக்கு வந்தா என்னை எழுப்புனு... டெய்லியும் 'பெட்சீட்ட இப்படி அசிங்கம் பன்னா யார்ரா இத சுத்தம் செய்றது' என்று சத்தமிட்டாள். 

நான் என்னமா பன்றது 'ஒன்னுக்கு எப்ப வருதுனு தெரிஞ்சா' நான் உன்ன எழுப்பமாட்டேனா.. என கண்ணை தேய்தபடி சோபாவில் போய் அமர்ந்தான்.

இதெல்லாம் உனக்கு தெரியாது.. உன் "மிஸ்க்கு தினமும் ரோஸ் எடுத்திட்டு போறதுக்கு மட்டும் நல்லா தெரியும் என்றவாறே அவன் கையில் ஒரு கப் டீயை கொடுத்தாள். 

சரத்... நா இப்ப "டீ குடிக்கிறதா இல்ல படிக்கிறதா" என்று முனுமுனுத்தான். நீ என்னுமோ பன்னு ஆனா நா ஆறு மணிக்கு சுடுதண்ணீரோட பாத்ரூம்ல இருப்பேன். அதுக்குள்ள நீ அங்க வரனும் என்று அதட்டினாள். 

அதெல்லாம் என்னால முடியாது என்னால குளிக்க முடியாது, எனக்கு குளிரும் போ... நா குளிக்கமாட்டேன் என அடம்பிடித்தான். 

"அதெல்லாம் முடியாது இப்படியே இன்னும் எத்தன நாளிக்கு ஏமாத்துவ" ஒழுங்கா எழுதிட்டு பாத்ரூம்புக்கு வந்துசேரு என சத்தமிட்டபடியே சமையல் அறைக்கு சென்றாள் ஜானகி. 

அவள் போனதும் சிறிது நேரம் எழுதியவன் எழுதியபடியே உறங்கினான். சிறிது நேரத்தில் அவளின் சத்தம் "டே என்னடா பன்ற என்ற சத்தம் கேட்கவே"

இதே வரேன், என்று 'அவசர அவசரமாக புத்தக்தை பேகில் போட்டு மூடிவிட்டு' பாத்ரூம்பிற்கு வந்தான். 

சிறிது கொதித்த தண்ணீரில் குளியலை முடித்துவிட்டு சரத் 'யூனிபாம் மாட்டியபோது' அவனுடைய அப்பா மெதுவாக எழுந்தார். 

தம்பி என்ன பன்றீங்க? என சரத்தை பாத்து கேட்கவே... அவனோ அமைதியாக  சின்ன கோபத்துடன் தலையை திருப்பி கண்ணாடியை பார்த்து நின்றான்.

அவனின் கோபத்தை புரிந்துகொண்டு அவனை சமாதனம்படுத்த... ஜானகியை பார்த்து ஏண்டி! "புள்ளியை போட்டு இந்த பாடுபடுத்திர" என்று அதட்டினான். 

நீ வாட... இன்னிக்கு நாம "ஸ்கூலுக்கு வண்டியில போவோம்" என கண்ணை தேய்துவிட்டு அவனை தூக்கி அரவனைந்தான் சரத்தின் அப்பா. 

நீங்க கொஞ்சுனது போதும், இன்னும் அரமணிநேரத்தில பஸ் வரும் அதுல அவன் போகட்டும், நீங்க உங்க வேலயை பாருங்க. இன்னிக்கு ஒருநாள்  வண்டியில கூட்டிட்டுபோனா அப்புறம் "டெய்லியும் நா அப்பாகூட வண்டியில தான் போவேனு" அடபிடிப்பான். இது உங்களுக்கு தேவையா? என சத்தமிட்டாள்.

ஜானகி பேசுவதை கேட்டுகொண்டவன் அமைதியாக காட்டுபுறத்தை நோக்கி சென்றான்...

டிரஸ்சை போட்டபின்பு அவனுக்காக வைத்திருந்த "சுடான இட்லியை அவசர அவசரமாக அவனுக்கு" ஊட்டினாள். 

சரத் சாப்பிட்ட சிறிது நேரத்திலே அவனுடைய "உஸ்கூல் வேன் வரும் சத்தம் கேட்கவே" சரத்தை அழைத்துகொண்டு அவனுடைய பேக்கை கையில் எடுத்துகொண்டு வேகமாக ஓடி... சரத்தை வேனில் ஏற்றிவிட்டு 'பத்திரமா பாத்துபோய்ட்டுவாபா' என கை அசைத்தாள். 

இதையெல்லாம் பொருத்துகொண்டே வேனில் ஏறியவன் 'போதுமடா சாமி' என ஒரு சீட்டில் போய் அமர்த்தான். 

அமர்ந்தவன் அசதியில் கொஞ்சம் தூக்கவே "டே கண்ணா எழுந்து கிளாஸ்க்கு போடா" என வேனில் இருந்த ஆயா அவனை தட்டினாள். 

வேனை விட்டு இறங்கியவன் பல இன்னல்களை தாண்டி கலைப்புடன் மாலை வீடு வந்து சேர்ந்தான்... வந்தவனை கொஞ்சம் நேரம் கொஞ்சியவள் "டே இந்தி டியூசன் போடா என அவன் தலையை தடவி" கொடுந்தாள்.

டியூசன் சென்று திரும்பியவனை "டே இன்னிக்கு ஓம்வொர்க் என்னா கொடுந்தாங்க" அத கொஞ்சம் எடுத்து பாரு என்று அவன் முன்பு அவனுடைய பேக்கை தூக்கி வீசினாள் ஜானகி... 

இரவு பத்து மணிக்கு இருந்த "ஓம்வொர்க் எல்லாம் முடிக்கவே என்னால முடியல" என மயங்கபடியே படுக்க சென்றவன்... அடுந்தநாளும் இதே நிலை என்பதை மறுந்துவிடாமல் மயங்கினான்...  

No comments:

Post a Comment