Sunday, 23 August 2020

இது யாருக்கான வாழ்க்கை

                            இது யாருக்கான வாழ்க்கை --  ஜெய்முருகன்


தன் குடும்ப கஷ்டத்தை  ஆண்டவனிடம்  சொல்லி ஆறுதல் கேட்க  சென்றவளை நிறுத்தி என்னாடி நேரமாச்சி வேலைக்கு வரலயா என்றாள் பக்கத்து வீட்டு பார்வதி. நீ போடி நா கோயிலுக்கு போய்டுவரேன் என்று மெதுவாக பேசிவிட்டு,  அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் வளர்மதி.

 கோயிலுக்குதானே போர அப்போ இரு நானும் வரேன் என்றவள்,  நீ இல்லாமா நான் மட்டும் அங்க போய் ஒன்னும் செய்யபோறதில்ல என முனுமுனுத்தபடியே வளர்மதியுடன் நடக்க தொடங்கினாள்.


இருவரும் சேர்ந்து கோயிலை நோக்கி நடந்தபோது.. வளர்மதி எதுவும் பேசாமல் மௌனமாக வருவதை கண்ட பார்வதி அவள் அமைதியை கலைக்கும் விதமாக என்னாடி இப்பெல்லாம் வாரத்துக்கு நாலு முற கோயிலுக்கு போர, எப்ப பாத்தாலும் எதையோ இழந்தமாதிரி மூஞ்ச வச்சிகிற, என்னதான்டி ஆச்சு என இடைவிடாமல் கேள்வி எழுப்பினாள்.

இதை கேட்ட வளர்மதி அதெல்லாம் ஒன்னுமில்ல கொஞ்சநேரம் நீ பேசாம வரயா என்று அவள் கையை பிடித்து வேகமாக நடந்தாள். 

சிறிது நேரத்தில் கோயிலுக்கு வந்த இருவரும் கோயில் வாசலில் உள்ள குழாயில் தனது கால்களை அழம்பிகொண்டு கடவுள் உள்ள
கருவறையை நோக்கி நடந்தனர். 


காலை வேலையில், மங்களகரமாக அழங்கரிக்கப்பட்டிருந்த கடவுளை பார்த்து இருவரும் கைகூப்பி வணங்கினர். வளர்மதி நீண்ட நேரமாக கண்களை மூடிகொண்டு கடவுளிடம் தன் மனதில் உள்ளதை பேசி மனபோராட்டம் செய்துகொண்டிருந்தாள்.. 

இது யாருக்கான வாழ்க்கை

இதை கவனித்த பார்வதி அவளுக்கு எந்த தடங்கலும்  செய்யாமல் அமைதியா வெளியே வந்து நின்றாள். சிறிது நேரம் கழிந்தபின்பு வெளியே வந்த வளர்மதி,, வாடி போலாம் என்றாள். வளர்மதியின் கையை பிடித்த பார்வதி வேலைக்கு அப்புறம் போவோம்.. 

முதல்ல உன் கண்ல இருந்து வரும் நீர துடை என்றவள்.. உண்மையிலே நா உன்னுடைய தோழினு நீ நினைச்சா உன் பிரச்சனை என்னானு?எங்கிட்ட சொல்லு என வினவினாள். இவளிடம் மறைக்கமுடியாமல் சிறிது நேரம் அமைதியாக நின்றவள்... "உனக்கு தெரியாதது ஒன்னும் இல்லடி"  

எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருசத்துக்கு மேல ஆகிடுச்சி, ஆனா இன்னவரைக்கும் என் வைத்துல ஒரு புளு, பூச்சி கூட இல்ல... அத பத்தி இப்போ, என் மாமியார் மட்டும் இல்லாம, ஊர்ல இருக்க மொத்த ஜனமும் இதையே கேட்டு, கேட்டு என்ன  தினமும் கேவலபடுத்திறாங்க... 

அவருக்கு என் கூட வாழ கொஞ்சம்கூட விருப்பமே இல்ல. வேலைக்கு போகாம எப்ப பாத்தாலும் குடிச்சிட்டு ஊர்ல இருக்கிற எல்லா கெட்ட பழக்கத்தையும் செய்றாறு. இததெல்லாம் போதாதுனு இப்போ என் கூலி காசையும் கொடுக்கசொல்லி எங்கிட்ட சண்டைக்கு வராரு. இப்போ நா என்னா செய்றது சொல்லு.. 

என் கூலி காசு இல்லாம அங்க எங்கப்பா எவ்வளவு கஷ்டபடுறாருனு எனக்குதான்டி தெரியும். இந்த வயசான காலத்திலும் வேலைக்கு போகவேண்டிய நிலைமைக்கு அவர் வந்துட்டாரு.  இந்த நிலையில இன்னும் ஆறு மாசத்தில என் தங்கச்சிக்கு கல்யாணம் வேற இருக்கு அதுக்குள்ள நான் என்னா பன்னபோறேனே எனக்கே
தெரியல. 


இப்போ நான் என் நிலமைய நெனச்சி அழுவேனா !  இல்ல எங்க குடும்ப சூழ்நிலைய நெனச்சி அழுவேனா! எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டமுன்னு தெரியல.. என மனசுல இருந்த மொத்த கஷ்டத்தையும் பார்வதியிடம் சொல்லிகொண்டு அழுதாள். 

women story
women story

இதை கேட்டுகொண்டிருந்த பார்வதி, எப்படி ஆறுதல் கூறுவதென்று தெரியாமல், சரி விடு கூடிய சீக்கிரம் உன் கஷ்டமெல்லாம் தீந்திடும்.. என்று பையில் இருந்த தண்ணிர் பாட்டிலை எடுத்து அவளுக்கு கொடுத்தாள். தண்ணிரை குடித்தவள் சிறிது ஆறுதல் அடையவே அமைதியாக அங்கிருந்து இருவரும் புறப்பட எழுந்தனர். 

அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி இவர்கள் இருவரையும் பார்த்து பலமாக சிரித்தாள். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, எதற்காக நம்மை பார்த்து இந்த கிளவி இப்படி சிரிக்கிறாள் என்று இருவரும் குழம்பினர். பார்வதிக்கு கோபம் தலையை தொட்டது.. 

ஏற்கனவே வளர்மதி மிகுந்த சோகத்தில் இருக்கிறாள் அதை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த கிளவியின் சிரிப்பு உள்ளதே என கோபம்கொண்டாள். ஏய் கிளவி உனக்கு என்ன! வேனும் என்று கேட்டபடியே இருவரும் அவளை விட்டு விலகி நடக்க முற்பட்டனர். 

ஆனால் அந்த மூதாட்டியோ, வளர்மதியின் கையை பிடித்த மூதாட்டி தாயே எனக்கு ஒன்றும் வேண்டாம். உனக்குதான் இப்போது ஒரு தீர்வு தேவைபடுகிறது என சிரித்தாள்.

ஆம் மகளே நீங்கள் பேசியது அனைத்தையும் நான் கேட்டேன்
உன்னுடைய இந்த பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு ஒன்றுதான் என்று சிரிந்தாள். இருவரும் ஒன்றும் புரியாமல் என்ன சொல்கிறாய் பாட்டி என்றவள் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களே என்று அந்த மூதாட்டியின் கையை பிடித்தாள் வளர்மதி.


அது வேற ஒன்றுமில்லை அந்த ஒரு தீர்வு உன்னுடைய கணவன் மட்டும்தான் என்றாள். சிறிது யோசித்தவள் அது எப்படி என் கணவன் மட்டுமாகும் என மூதாட்டியிடம் வினவினாள்.  

women story
women story

இவளின் இந்த சந்தேகத்திற்கு பதில் சொல்லும் விதமாக வளர்மதியை பார்த்து மகளே அது ஒன்றுமில்லை உன்னுடைய கணவன் ஒழுக்கமானவனாக இருந்திருந்தாள். 

உனக்கு ஏற்பட்டுள்ள மலடி என்கிற அவபெயர் தீர்த்து தாய்மை நிலையை அடைந்திருப்பாய்..அப்போது ஊராரின் இந்த இழிசொல்லில் இருந்து விடுபட்டிருப்பாய். உன்னுடைய வருமானம் உன் கணவனுக்கு சிறிது எடுத்துகொண்டு மீதியை உன் தகப்பனிடம் கொடுத்திருப்பாய்.. 

அது உன் தங்கையின் கல்யாணத்திற்கு உதவி இருக்கும்... இதனால் உன் தகப்பனின் கஷ்டமும் தீர்த்துவிடும் அதன்பின்பு வேறு எந்த பிரச்சனை உன்னை நெறுங்கபோகிறது. எனவே தான் இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு உன் கணவன் என்று கூறினேன். 

உன்னுடைய அழுகையை சிறிது நேரம் நிறுத்திவிட்டு கொஞ்சம் யோசித்துபார் உனக்கே பிரச்சனை எங்குள்ளது, அதற்கான காரணம் என்னவென்று புரியும். அதற்குபின் அதற்கான தீர்வும் உனக்கே எளிதில் கிடைத்துவிடும் என்று சிரித்தபடியே அவர்களை விட்டு விலகினான் மூதாட்டி. 

இருவரும் அந்த மூதாட்டியை பார்த்து வணங்கியபடியே அவள் கூறியதில் உள்ள உண்மையை உணர்ந்தனர். அந்த மூதாட்டி கூறிய படியே என் கணவனை ஒழுக்கமாக மாற்ற என்ன செய்யவேண்டுமோ அதை முதலில் செய்கிறேன். 

அதன்பின் என்னநடக்கபோகிறது என்பதை பார்போம் என்று துணிச்சலாக  பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் வளர்மதி. 

ஆம் நாமும் இதுபோலதான் பிரச்சனை எது என்பதை உணராமல் அதற்கான காரணத்தையும் அறியாமல் மொத்தமாக புலம்புகிறோம். அதை முற்றிலும் தவிர்த்துவிட்டு பிரச்சனைக்கான காரணத்தை கண்டறித்து.. அதற்கான தீர்வை நோக்கி பயணிப்போம்...No comments:

Post a Comment