Friday, 7 August 2020

Who will cry when you Die Book Summary


  Book      --  Who will cry when you Die Book Summary in Tamil
  Author  --   Robin Sharma


யார் அழுவார் நீ உயிர் துறக்கையில் என்ற இப்புத்தகத்தினை நாம் படிப்பதின் மூலம் நம்முடைய வாழ்க்கையை நாம் எவ்வாறு வெற்றிகரமாக அமைத்துகொள்ளுவது என்பதை நம்மால் உணரமுடியும் என்கிறார்.  இப்புத்தகத்தின் ஆசிரியர் ராபின் ஷர்மா அவர்கள். இப்புத்தகத்தில் கூறியுள்ள நூறு கருத்துக்களில் சிலவற்றை மட்டும் பார்போம்...

1. நீ பிறந்தபோது இவ்வுலகம் சிரித்தது, நீ இறக்கும்போது பிறர் அழுதால்தான் உன்னுடைய ஆத்மா சாந்தி அடையும்.

2. அதிகாலையில் எழும் பழக்கத்தை உருவாக்கிகொள்ளுங்கள். வாழ்க்கையில் சாதித்த அனைவருமே அதிகாலையில் எழுந்தவர்களே.

3. அதிகாலையில் நமக்கு கிடைக்கும் முதல் முப்பது நிமிடத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள். இது அந்தநாளை மிகவும் சுறுசுறுப்பானதாக மாற்றும்.

4. அதிகம் சிரிக்க பழகுங்கள், இது நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் நேர்மறை சிந்தனைக்கு உட்படுத்தும்.

5. உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ, அந்த துறையின் மீதே உங்களின் கவனத்தை செலுத்துங்கள்.

6. நாம், நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் அன்பாக இருங்கள். எனெனில், அவர்களிடமிருந்து நாம் கற்றுகொள்ள எதோ ஒரு பாடம் நிச்சியம் உள்ளது.

7. "இன்றைய நாள் எனக்கான நாள்" இன்று எனக்கு நல்லதே நடக்கும், என இந்தநாளை நாம் தொடங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய கடந்தகால தோல்வி, மனசோர்வு போன்றவை முற்றிலும் கலைந்து, புதிய உத்வேகத்துடன் இன்று நாம் செயல்பட முடியும் என்கிறார்.

READ MORE:   The Science of Getting Rich Book Summary in Tamil CLICK HERE

8. நமக்கு நாமே பேசிக்கொள்ளுதல் வேண்டும். நாம் பிறரிடம் எவ்வாறு பேசிகொள்கிறமோ அதேபோல் நம்மிடம் நாமே பேசிகொள்ளுதல் வேண்டும். இதற்கு தியானத்தை பயன்படுத்துவது சிறந்த முறையாகும்.  

Who will cry when you Die 

9. தங்களின் இலட்சியம் சார்ந்த அமைப்பை நாம் உருவாக்கவேண்டும், இல்லையெனில் உங்களின் மனம் கவர்த்த மனிதர்கள் அல்லது அவர்களின் புத்தகங்களை வாசிப்பதின் மூலம் உங்களின் மனமானது மேலும் வலிமை பெறும்.

10. வாரத்தில் ஒருநாள் கண்டிப்பாக ஒய்வு எடுங்கள். இன்நாளில் சிறிது நேரம் தனிமையில் அமர்ந்து நீங்கள் காண விரும்பும் இடம், அல்லது அடைய விரும்பும் இலட்சியத்தை உங்களின் மணகண்ணோட்டத்தில் கண்டு மகிழ்சியடையுங்கள் என்கிறார்.

11. அடிகடி கவலைபடவேண்டாம். கவலைபட ஆசைபட்டால் ஒரு நாளில் சிறிதுநேரம் ஒதுக்குங்கள். அப்போது நம்முடைய பிரச்சனை குறித்து ஒரு பட்டியல் தயார்செய்யுங்கள். அவ்வாறு செய்யும்போதே சில பிரச்சனைக்கு உங்களால் தீர்வு காணு முடியும்.

12. நாம் எப்போதும் ஒரு குழந்தையை போல் மனநிலை கொள்ளவேண்டும். அவ்வாறு இருப்பதின் மூலம் நம்முடைய கவலையை மறந்து சந்தோஷத்தை அதிகரிக்க செய்யமுடியும்.

13. எப்போதும் அமைதியாக இருங்கள், அமைதியாக இருப்பதன் மூலம் நம்முடைய உடல், மனம், ஆன்மா போன்ற மூன்றும் அமைதியடையும். இதன் மூலம் நம்மை நாமே பரிசோதிக்கவும், நமக்கான குறிகோள் எதுவென கண்டறிய முடியும்.

14. உடல் என்னும் கோயிலை பாதுகாக்க நாம் தினமும் முறையான உடற்பயிற்சி, தியானம், நீச்சல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். இது நம் உடலை வலுபடுத்துவதோடு இல்லாமல் நம்முடைய மன அழுத்தத்தை குறைந்து நம் வாழ்நாளை நீட்டிக்கசெய்கிறது.

READ MORE : நான் யார் பக்கம் (தொடர்-2)  - நெடுந்தொடர்  CLICK HERE

15. எதாவது ஒருநாள் கடிகாரம் பார்க்காமல் இருக்கவேண்டும். அப்போதுதான் படபடப்பு இல்லாம, நம்மை நாமே வேகமாக ஆட்கொள்ளாமல் காலத்துடன் ஒற்றினைய முடியும்.

16. குறிப்பேடு வைத்துகொள்ளுதல், அதாவது நாம் எழுதும் குறிப்பேடின் மூலம் நம்முடைய சுயசித்தனை, மற்றும் நம்முடைய மெய்அறிவு வளரும் என்கிறார். 

17. வாய்மை என்னும் வேதாந்தம் வளர்த்து கொள்ளுதல். இதன் மூலம் நம்முடைய பேச்சை குறைந்து, நமக்கான திறமையை செயலின் மூலம் நிரூபித்து காட்டுதல்.

18. கடந்த காலத்திற்கு மரியாதை செலுத்துதல். இதுவே நம்முடைய தற்போதிய நிலைக்கு காரணம் உள்ளது.

Who will cry when you Die Book

19. உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை ஒரு வாய்ப்பாக பாருங்கள். இதுவே உங்களின் மன உறுதியை வலுசேர்க்கும் ஒரு ஆயுதமாக அமையும்.

20. துணித்து செயல்படுதல். நாம் நழுவவிடும் வாய்பின் பலனானது, மற்றொருவர் துணித்து முடிவெடுப்பதின் மூலம் கிடைந்த பலனே தவர அவரின் அதிஷ்டமாக இருக்கமுடியாது. 

21. "இது நமக்கான வாழ்க்கை" என்று வாழுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், இதற்கிடையில் வரும் வெற்றி, தோல்வியெல்லாம் நமக்கு கிடைத்த அனுபவமே என நினைத்து சமநிலை அடையவேண்டும்.

22. திரைபடத்தின் மூலம் நல்ல விசியங்களை கற்றுகொள்ளுதல். இதில் வரும் கதாபாத்திரத்தின் மூலம் நமக்கான பாடம் கிடைக்க வாய்புள்ளது.
23. உங்களிடம் உள்ள பணத்தை ஆசிர்வதியுங்கள். அதாவது நம்மிடமிருந்து செல்லும் பணமானது பலமடங்கு அதிகரித்து மீண்டும் அது நம்மிடமே வரவேண்டும் என பணத்தை ஆசிர்வதியுங்கள்.

24. கைபேசி பயன்படுத்துவதை குறைப்பது அவசியம் இல்லாவிடில், சிறிதுநேரம் தவிர்ப்பது சிறந்தது.

25. "இன்றே கடைசி நாள்" என நினைத்து சந்தோஷமாக செயல்படுங்கள்.

26. மனதிற்கு அமைதி தரும் நல்ல இசையை கேளுங்கள்.

27. முக்கிய நிகழ்வினை புகைபடம் எடுத்துகொள்ளுங்கள். காலம் கடந்தபின் நாம் மீண்டும் பழைய நினைவிற்கு சென்றுவர இப்புகைபடம் உதவும்.

28. எப்போதும் மிக எளிமையான மனிதராக இருங்கள். வாழ்வில் வென்ற பலரும் மிக எளிமையாகவே தோன்றுகிறார்கள்.

29. எத்தனை நண்பர்கள் உங்களை சுற்றி இருந்தாலும் அவர்களில், சிறந்த மூன்று நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களிடம் பழுகுங்கள்.


30. தனக்கு என்ன வேண்டும் என்பதை கேட்க ஒருபோதும் தயங்காதீர்கள். தனக்கு வேண்டியதை எப்போதும் கேட்டு பெற்றுகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment