Monday, 31 August 2020

திருவிழாவில் காணாமல்போன திருடன்


              THE THIEF WHO WENT MISSING AT THE FESTIVAL -- JAIMURUGAN


கண்ட இடத்தில், கண்ணில் கண்டதையெல்லாம் திருடிய கோடாரி. ஒரே இடத்தில் "ஒட்டுமொத்தமாக திருட திட்டம் தீட்டி" அதற்காக இரண்டு ஆட்களை தன்னுடன் சேர்ந்து கொண்டு பங்குனி உத்திர திருவிழாவிற்கு வந்துசேர்ந்தான். 

திருவிழாவிற்கு இருந்த கூட்டத்தை கண்ட குஷியில் சிரித்தபடியே கைகளை நன்றாக சொரிஞ்சி கொண்டார்கள். கோடாரி தன் புது கூட்டாளிகளுக்கு யாரிடமும் மாட்டிகொள்ளாமல் எப்படி திருடுவது என்பதை பற்றி பாடம் நடத்தினான்.
 
நம்முடைய கடமையை செய்யும்போது நம்மில் யாராவது ஒருவர் மாட்டிகொண்டாலும் தன் "உயிரே போனாலும்" மத்தவர்களை காட்டிகொடுக்ககூடாது என சபதம் வாங்கினான். 

அவர்களும் தொழிலுக்கு புதுசு என்பதனால் கோடாரி கூறிய அனைத்திற்கும் தலையாட்டினர். மாலை ஆறு மணிக்கு மறுபடியும், இதே இடத்தில் சந்திப்போம் என கூறிவிட்டு மூவரும் "ஆறுபடையப்பனின் அருளை பெற்றுபடியே பிரசாதத்தை வாங்கிகொண்டு" ஆளக்கொரு திசையில் ஆனந்தமாக திருட சென்றனர்... 

police -thief story in festival

நாம் திருடுவதை கொஞ்சம் தனியே வைத்துகொண்டு மீதியை மட்டும் இவர்களிடத்தில் கணக்கு காட்டிவிட்டு.. அவர்களிடம் உள்ள அனைத்தையும் நாமே எடுத்துகொள்வோம்..


 ஏதோ! கொஞ்சம்மட்டும் அவர்களுக்கு கொடுத்தால் போதும் என கோடாரி தன் "மனதிலே மிகபெரிய திட்டம் தீட்டி கொண்டு" சிரித்தான். இவர்களில் ஒருவனோ தனக்கு காது கேட்காது என்பதையும், தன்னுடன் இருப்பவன் சற்று மனநலம் பாதிக்கபட்டவன் என்பதையும் கோடாரிக்கு தெரியாதவாறு சமாளித்துவிட்டு திருட புறப்பட்டான். 

இப்படியொரு சிஷ்யர்களை வைத்து இந்த திட்டத்தில் ஏண்டா ஈடுபட்டோம் என்பதை உணராமல் கூட்டத்தை நோக்கி தன் வித்தையை காட்டினான் கோடாரி... 

மூவரும் ஆளக்கொரு திசையில் மும்முரமாக திருடிகொண்டிருக்க காது கேட்காதவனோ மணிபருஸ், மொபைல், கடையில் உள்ள கள்ளாபெட்டி என திருட..  

மற்றொரு பக்கம், மனநலம் பாதிக்கபட்டவனோ.! கடையில் உள்ள விளையாட்டு பொம்மை, குழந்தை வச்சிருந்த விளையாட்டு போனு.. என அனைத்தையும் திருடினான். இவர்களின் தலைவனான கோடாரியோ.! பெண்கள் அணிந்திருக்கும் நகை, ஆண்களின் சைன், உண்டியல் என பாத்துபாத்து மெதுவாக திருடினான். 

இப்படி மூன்று பேரும் ஆளுக்கொருபுரம் திருடிகொண்டிருந்தபோது, மனநலம் பாதிக்கபட்டவனோ ஒரு "குழந்தையின் கையில் கட்டியிருந்த ஓடாத வாட்ச்சை திருடி தன் கையில் கட்டிகொண்டான்." 

சிறிது நேரம் கழித்து அதில் நேரத்தை பார்த்தவன், "அச்சச்சோ தலைவன் சொன்ன நேரம் வந்துடுச்சே" என அவசர அவசரமாக திடுடிகொண்டு.. "கோடாரி சொன்ன இடத்திற்கு வந்துசேர்ந்தான்". 


வந்தவன் சிறுது நேரம் காத்திருந்து, இவ்வளவு நேரமாகியும் யாருமே வரவில்லையே அவுங்களுக்கு என்னாச்சி.? ஒருவேல கூட்டத்தில "எந்த எடமுனு தெரியாம கஷ்டபடுவாங்களோ" என முனுமுனுத்தான். என்னாவிருக்கும்? என யோசித்தவாறே எல்லா இடத்திலும் "அவர்களை தேடி சுற்றியழைந்தான்". 

police -thief story in festival

என்னா! செய்வது என்று புரியாமல் அவன் நின்றபோது, அங்கிருந்த ஒலிபெருக்கியின் சத்தம், "இங்கே வந்து உன் பிரச்சனையை சொல்லு" என்றவாறு சத்தமிட, உடனே "ஒலிபெருக்கி மையத்திற்கு" சென்றான் பிளேடு.

அங்கிருந்தவர்களிடம், கூட்டத்தில் என்னுடைய நண்பர்கள் இருவர் எங்க போனார்கள் என்றே! தெரியவில்லை !அதைபத்தி, நான் "கொஞ்சம் பேசிக்கிறேன்" என கோயில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிகொண்டு பேச ஆரம்பித்தான்... 

மைக் டெஸ்டிங் 123... அலோ "கோடாரி குருவே"  நான்தான் பிளேடு பேசுறே... நீங்க சொன்னமாதிரியோ கரட்டா ஆறு மணிக்கு "நீங்க சொன்ன அதே இடத்துக்கு வந்துட்டேன்" நீங்கதான் எடம் தெரியாம எங்கயோ போய்ட்டிங்க போலிருக்கு..பரவாயில்ல,  இந்த ரேடியாசெட்டு இருக்கிற ரூம்கிட்ட வாங்க.. நான் இங்கதான் இருக்கேன். 

அப்புறம் ஒரு முக்கியமான விசியம் குருவே.. "நீங்க சொன்னதவிட ஜாஸ்தியாவே பொருள திருடியிருக்கேன்" நீங்க இந்த பொருளயெல்லாம் பாத்தா ரொம்ப "குஷியாடுவிங்க" சீக்கிரம் வாங்க குருவே நேரமாச்சி.. என்று பேசிவிட்டு மைக்கை கீழே வைத்தான். 


இதை கேட்ட கோடாரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை... கூட்டத்திருந்த அனைவரும் தங்கள் பொருட்களை பத்திரபடுத்திகொண்டு "யார் அந்த திருடன் என்று அங்கம்,பக்கம் திரும்பி திரும்பி" பார்த்தனர்... யாராவது நம்ள கண்டுபிடிச்சிருவாங்களோ என கோடாரி திருதிருவென முழித்தான். 

ஆனால் கத்தியோ! இதை எதையும் காதுல போட்டுக்காம  தலைவன் சொன்ன டைம் இன்னும் வரலனு.. என்று அவபாட்டுக்கு திருடிகொண்டிருந்தான்.  

இதை கேட்ட கோயில் நிர்வாகத்தினர்,  பிளேடை பிடித்து உன் கூட்டாளி யார்! யாரு!எங்ககிட்ட சொல்லு, இல்ல அவங்க அடையாளத்த சொல்லு!.. நாங்களே அவங்கள கூட்டிட்டு வரோம்னு.. பிளேடுவிடம் சாதுரியமாக விசாரித்தனர். 

இதை கேட்ட பிளேடு, அவர்களின் அடையாளத்தை சொல்லவே கோயில் நிர்வாகி மைக்கை மெதுவாக பிளேடு அருகே கொண்டுசென்றார். 

police -thief story in festival


இதை கேட்ட மக்கள் அனைவரும் இவன் கூறும் அடையாளம் யாரென்று அக்கம் ,பக்கம் "திரும்பி திரும்பி பாக்க" கோடாரியோ இனிமேல் இங்கிருந்தால் வசமாக மாட்டிகொள்வேன் "முதல்ல இங்கிருந்து ஜுட்விடுவோம்" என்று மெதுவாக கூட்டத்தை விட்டு வெளியேறினான். 


அப்போது, கூட்டத்தை சுற்றியிருந்த காவலர்கள், அமைதியாக கோடாரியின் கையை பிடித்து காரில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்..

காது கேட்காத கத்தியோ, கடத்திய பொருளை தொலைந்துவிட்டு தலைவனிடம் என்னா ! சொல்வதென்று தெரியாமல் கோடாரி சொன்ன இடத்திலே காத்திருந்தான். 

கோயில் நிர்வாகமோ பிளேடுவிடம் இருந்த பொம்மைகளை பிடிங்கிகொண்டு, இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்யகூடாது என அவனை கண்டித்து அனுப்பியது. 

காவல் நிலலயத்தில் கோடாரியோ "எங்க திருடலாமுனு திட்டம் போட்டேனே தவிர யார் வச்சி திருடலாமுனு திட்டம் போட மறந்திட்டனே".. என தன் தலையில் அடித்துகொண்டு கண்ணத்தில் கை வைத்து அமர்திருந்தான்...

No comments:

Post a Comment