Friday, 14 August 2020

கொரோனாவை வென்ற காதல்

               THE LOVE THAT WON THE CORONA  --  JAI MURUGAN


கல்லூரியில் மலர்ந்த காதலை கல்லூரி முடிந்தபின்பும் காலத்திற்கேற்ப பக்குவபடுத்தி இருவரும் ஒரே மனநிலையில் முதலில் ஒரு நல்ல கம்பெனியில் சேர்ந்து பணிபுரிவோம். 

அதன்பிறகு ஒரு நல்ல நிலைமைக்கு வந்தபின் திருமணம் செய்துகொள்வோம் என்று முடிவெடுத்தனர். மூர்த்தியும் பல நிறுவனத்தின் படி ஏறி, இறங்கியபின் அவன் திறமைக்கேற்ப ஒரு வேலையும் கிடைத்தது. பானுவோ, வங்கியில் வேலை வாங்கிவிடலாம் என்று வங்கி தேர்வுக்கு தன்னை தயார்படுத்தினாள். இவ்வாறு இருவரும் தனக்கான பாதையை நோக்கி பயணித்து  கொண்டிருக்க.. 

அடுத்த ஆறு மாதத்தில் மூர்த்தியை வடமாநிலத்தில் உள்ள ஒரு பகுதிக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்தனர். என்ன செய்வதென்று, எப்படி இவளை விட்டு பிரிந்து இருப்பது என யோசித்தவனை.. ஆறுதல் கூறி அனுப்பிவைத்தாள் பானு. 

ஆளுக்கொரு இடமென இருவரும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் இவர்களின் காதலின் அளவும் இருவருக்குமான புரிதலும் கொஞ்சமும் குறையாமல் இருந்தது.

விரைவில் ஒரு நல்ல நிலைக்கு வந்திடுவோம் அதன்பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளலாம் என இருவரும் சந்தோஷமாக கைபேசியில் தன் காதலை வளர்த்தனர். 

The love that won the corona 

இதற்கிடையில் தன் மகளின் படிப்பு முடித்தது என எண்ணிய பானுவின் பெற்றோர்கள்.. தங்களின் கடமையை முடிந்துவிடலாம் என அவளுக்கு ஒரு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். பெற்றோரின் இச்செயலை எதிர்பார்க்காத பானு இத்தகவலை மூர்த்திக்கு தெரியபடுத்தினாள். 

இதைகேட்ட மூர்த்தியோ நீ எதுக்கும் பயப்படாத, திருமணத்தை பற்றி பின்பு முடிவெடுப்போம். முதலில் இருவீட்டாரின் சம்மதத்தை பெற்றுகொண்டு.. நிச்சியம் முடித்துகொள்வோம் என்று இவளிடம் தன் எண்ணத்தை தெளிவுபடுத்திவிட்டு தம் ஊரை நோக்கி விரைந்தான். 


ஊருக்கு வந்தவன் காதலை தன் அப்பாவிடம் விளக்கிவிட்டு பானுவை பெண் கேட்க அவள் வீட்டிற்கு அழைத்து சென்றான். பானுவின் பெற்றோர் சில காரணத்தால் இதற்கு மறுப்பு தெரிவிக்க அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினான். 

அவளின் பெற்றோரை எதிர்த்து, வீட்டை விட்டு வெளியேறினாலும் மொழி தெரியாத ஊரில் அவளை அழைத்து சென்று வாழ்வது என்பது மிக கடினம் என எண்ணினான். 

என்னசெய்வது என்று யோசித்தவன்,  மூன்று மாதம் பொருத்துகொள் நான் வேலையை ராஜுனாமா செய்துவிட்டு இங்கேயே வந்துவிடுகிறோன்.

 அதன்பின் நாம் திருமணம் செய்துகொள்வோம் என அவளிடம் ஆறுதல் கூறிவிட்டு வேலைக்கு புறப்பட்டான். மூர்த்தி சென்ற சில வாரத்திலே கொரோனா என்னும் கொடியநோய் பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு தடை விதித்தனர். 

The love that won the corona 
                                                                            
இதனால் யாராலும் மாநிலத்தை விட்டு மற்ற மாநிலத்திற்கோ அல்லது மற்ற ஊர்களுக்கோ பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவசர தேவைக்கு  ஊரடங்கை மீறி பயணிக்கமுடியாது நிலை ஏற்பட்டது. வேண்டுமென்றால் ஈ- பாஸ் என்ற முறையை கடைபிடியுங்கள் என்று அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. 

இந்த நேரத்தை பயண்படுத்திகொண்ட பானுவின் அப்பா திருமணத்தை வேகமாக முடிக்க அவசர, அவசரமாக அலைந்து-திரிந்து வங்கியில் வேலை செய்யும் ஒருவனை பானுவின் கணவனாக்க முடிவெடுத்தார். 


அடுத்த மாதமே திருமணம் என்ற நிலையில் அதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டனர் பானுவின் பெற்றோர்கள்.

 இதையெல்லாம் பார்த்து நொந்துபோன பானு என்ன செய்வதென்று புரியாமல் அவனிடம் கண் கலங்கினாள். ஈ - பாஸ் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. 

கவலைபடாதே ஊரடங்கு முடிந்ததும் நிச்சயம் வருகிறேன், அதுவரை சிறிது பொறுத்துகொள் என்றான். ஊரடங்கு முடிந்ததும் ஊருக்கு செல்லலாம் என்ற அவனின் திட்டத்திற்கு மாறாக  கொரோனாவின் கோரதாண்டவத்தால் மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீட்டித்தது அரசாங்கம். 

இதைகேட்டு இருவரும் மேலும் அதிர்ந்துபோனார்கள். திருமணத்திற்கு இன்னும் எட்டே நாட்கள் உள்ளநிலையில் இனிமேலும் என்னால் பொறுத்துகொள்ளமுடியாது என எண்ணியவன் தன்னுடன் பணிபுரியும் நண்பனிடம் வண்டியை வாங்கிகொண்டு ஊருக்கு செல்ல ஏற்ற வழி எதுவென்று கண்டறிந்து அவ்வழியில் புறப்பட்டான். 

திருமணத்திற்கான நாள் நெருங்கிய நிலையில் பானுவோ தனிமையில் தவிர்த்துகொண்டிருக்க இவனின் வருகை அவளை கொஞ்சம் அமைதிபடுத்தியது. மூர்த்தியோ பல ஊர்களை கடந்து பல நாட்களாக ஓய்வெடுக்காமல் ஊரை வந்தடைந்தான். 


THE LOVE THAT WON THE CORONA
The love that won the corona 


ஊருக்கு வந்தவனிடம் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு தொற்று உள்ளது என மூர்த்தியை தனிமைபடுத்தினர். 

இருக்கும் பிரச்சனையில் இதுவேறயா என மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகினான். இந்த நிலையில் அவளை எப்படி பார்ப்பது என்று புரியாமல் தவித்தான். 

மருந்துவமனையை விட்டு வெளியேவும் செல்லமுடியாத நிலை அதையும் மீறி வெளியே சென்றால் இந்நோயால் மற்றவருக்கும் இந்த நோயின் பாதிப்பு ஏற்படுமே என்று சிந்தித்து எதுவும் செய்யாமல் அமைதியானான். 

மூர்த்தியின் இந்நிலையை கேட்ட பானுவோ மேலும் அதிர்த்துபோனாள். திருமணத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் வேறுவழி தெரியாமல்  தன் காதலை பற்றி மாப்பிள்ளையிடம் விளக்கி திருமணத்தை நிறுத்த ஏற்பாடு செய்தால். 

ஆனால் எதுவுமே அவளுக்கு எடுபடவில்லை. இறுதியாக தன் காதலை காப்பாற்றிகொள்ள தனக்கு கொரோனா தொற்று இருக்க வாய்புளளது நானும் அவருடன்தான் ஒரு நாள் இருந்தேன் என மருத்துவரிடம் பொய் கூறிவிட்டு மூர்த்தி இருக்கும் இடத்தை வந்தடைந்தாள். 


பின்பு மூர்த்தி-பானு இருவரும் மருத்துவமணைக்கு அருகில் உள்ள முருகர் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். சில நாட்களில் கொரோனா குணமாகவே இருவரும் இல்லறத்தை  நோக்கி நடந்தனர்....
                                                                                     --  By JAI MURUGAN
No comments:

Post a Comment