Tuesday, 7 July 2020

The Science of Getting Rich Book Summary

                               
                             The Science of Getting Rich Book Summary in Tamil

    புத்தகம் -- The Science of Getting Rich
 ஆசிரியர் -- Wallace D. Wattles

         இந்த புத்தகமானது 1910 -ஆம் ஆண்டு வெளியானது. பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி பணக்காரன் ஆவது எப்படி என்ற இரகசியத்தை இவ்வுலகிற்கு முதன் முதலில் விளக்கியது இப்புத்தகம்தான். அதன் பின்புதான் இதன் மையகருத்தை அடிநாதமாக கொண்டு Master key system, Think and Grow Rich, The Secret... போன்ற எராளமான பிற புத்தகங்கள் வெளிவர தொடங்கின.

இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை பின்பற்றுவதன் மூலம் நாமும் நம் வாழ்வில் மிகபெரிய பணக்காரன் ஆகமுடியும் என கூறுகிறார் ஆசிரியர். வாழ்வில் வெற்றிபெற்ற பலரும் இதபோன்ற இரகசியத்தை அறிந்தோ, அறியாமலோ பயன்படுத்தி அவர்களின் வாழ்வில் மிகபெரிய செல்வந்தராக மாறியுள்ளார்கள் என்பது இப்புத்தகத்தை படித்த பலரின் கருத்தாக உள்ளது.

அதாவது வாழ்வில் பணக்காரன் ஆகவேண்டுமென்றால் அதற்கு முதலில் தன்னுடைய நிலையை உயர்த்திகொள்ளுதல் வேண்டும். அதன்பின் தனக்கான வசதிகள் அனைத்தும் தானாக நம்மை வந்து சேரும் என சுருக்கமாக கூறுகிறார்.

READ MORE; The Seven Habits of Highly effective people Book Review  CLICK HERE

நாமும் நம்முடைய வாழ்வில் மிகபெரிய பணக்காரன் ஆகவேண்டும் என்ற லட்சியம் இருந்தால் இப்புத்தகத்தில் குறிப்பிடுவதுபோல தெளிவான இலக்கு மற்றும் அதை அடைவதற்கான சரியான வழிமுறைகள், தொலைநோக்கு பார்வை மற்றும் நன்றியுணர்வு போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் நிச்சியம் வெற்றி பெற முடியும் என்கிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர். 

இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில முக்கியமான கருத்துக்களை மட்டும் சுருக்கமாக இங்கு பார்ப்போம்...

              1. The Right to Be Rich
              2. There is A Science of getting Rich
              3. How Riches come to you
              4. Thinking in a certain way
              5. Acting in the certain way




1. The Right to Be Rich

   பணக்காரன் ஆவது நம் ஒவ்வொருவரின் உரிமை என்கிறார். நாம் நிச்சயம் பணக்காரன் ஆகமுடியும். பணக்காரர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்றும் அவர்கள் மற்றவர்களை ஏமாற்றியோ அல்லது கெட்டவழியில் மூலமோதான் பணத்தை கையாடள் செய்துதான்  பணக்காரர்கள் ஆகியிருப்பார்கள் என்று நாம் நினைப்பது முற்றிலும் தவறு.

அவர்கள் பணக்காரர்கள் ஆனதற்கு அவர்களின் செயலும், நோக்கமும் தான் காரணம் என்கிறார். அதாவது நாம் பணக்கார நிலையை அடைவதற்கு முன்பு நம்முடைய மனமானது முதலில் பணக்கார நிலையை அடைய வேண்டும்.

நம்முடைய மனம், உடல், ஆன்மா என அனைத்திலும் பணக்கார நிலையை கொண்டுவந்தால் மட்டுமே நம்மால் விரைவில் செல்வநிலையை அடைந்து வாழ்கையில் வெற்றிபெற்ற முழு நிலையை அடையமுடியும் என்கிறார். 

2. There is A Science of getting Rich

  நாம் பணக்காரர்கள் ஆகுவதற்கு சில குறிப்பிட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். நம்முடைய மனதின் எண்ணமானது பிரபஞ்ச சக்தியுடன் நேரடி தொடர்புடையது. அதனால் நமக்கு தேவையானதை பெறுவதற்கு நம்முடைய மனதினை பிரபஞ்ச சக்தியுடன் சேர்த்து செயல்படுவதின் மூலம் நமக்கு தேவையான அனைத்தையும் நம்மால் எளிதில் பெறமுடியும் என்கிறார்.

அதற்கு நம்முடைய சிந்தனையானது எப்போதும் நேர்மறையுடன் இருக்கவேண்டும். இவ்வாறு இருப்பதன் மூலம் நமக்கான வாய்ப்புகள் கண்டறிந்து அல்லது நம்மை சுற்றி நம்மாலே உருவாக்கிகொள்ள முடியும் என கூறுகிறார்.

READ MORE; The Alchemist By Paulo Coelho Book Review CLICK HERE

3. How Riches come to you

     நாம் மிகபெரிய பணக்காரன் ஆவதற்கு முன்பு நாம் அதை அடைந்துவிட்டது போன்ற நன்றி உணர்வில் இருக்கவேண்டும் என்கிறார். நாம் மற்றவர்களிடம் இருந்து பெற்றுகொண்ட பொருளின் மதிப்பை விட நாம் அவர்களுக்கு கொடுக்கும் பொருளின் மதிப்பு அதிகமாக இருக்கவேண்டும் என்கிறார்.

 இது நம்முடைய செல்வ மனநிலையை பன்மடங்கு பெரிதாக்கும். அதாவது நாம் பிறருக்கு செய்யும் செயல் அவரின் மீது உள்ள கருணையாக இல்லாமல் அவருக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கவேண்டும் என்கிறார். இந்த உதவியானது பின்நாளில் நமக்கு தேவையான உதவியை பூர்த்திசெய்யும் ஆயுதமாக மாறும் என குறிப்பிடுகிறார். இதுவே நாம் பணத்தை பெறுக்குவதற்கு ஒரு சிறந்தவழி என்கிறார்.

4. Thinking in a certain way

 நம்முடைய சிந்தனை மற்றவர்களை விட முற்றிலும் வேறுபட்டு இருக்கவேண்டும். அதாவது நமக்கு என்ன வேண்டும் என்பதில் நாம் எப்போதும் தெளிவான கண்ணோட்டத்தில் இருக்கவேண்டும். நாம் அடையபோகும் இலக்கை தெளிவான காட்சிகளின் மூலம் அடிகடி நினைவுபடுத்திகொண்டு அதை அடையவற்கு தேவையான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

 இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கான இலக்கை அடைய நாம் செய்யும் உறுதியான வழிமுறை என்கிறார். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்...
கேளுங்கள்- நம்புங்கள்- பெற்றுகொள்ளுங்கள் என்ற மந்திரம்தான் இதன் அடிநாதமாக உள்ளது என எடுத்துகொள்ளலாம். நம்முடைய இலக்கை நாம் ஏற்கனவே அடைந்துவிட்டோம் என்ற உணர்வில் இருந்துகொண்டு செயலாற்றினால் நமக்கான வெற்றி என்பது நிச்சியம் உண்டு என்கிறார். நமக்கான பாதையை தெளிவாக திட்டமிடவேண்டும் என முடிக்கிறார்.

5. Acting in the certain way

     குறிப்பிட்ட விதத்தில் செயல்படுவது என்பதன் பொருள், நமக்கான பாதையை அடைய தெளிவாக திட்டமிட்ட பின்பு அதில் வெற்றிபெற தெளிவான சிந்தனையை கொண்டு செயலாற்ற வேண்டும் என்கிறார். அதாவது நம்முடைய எண்ணமும், செயலும் ஒன்றாக இருந்தால் மட்டுமே நமக்கான வெற்றி என்பது உறுதியாகும்.

நாம் செய்யும் செயல் விளைவுதான் நமக்கான சூழ்நிலையை மாற்றி அமைக்கிறது. அதனை நாம் முழுமனதோடு பயன்படுத்திகொண்டு நமக்கான இலக்கை அடையசெய்வதின் மூலம் நாம் பணக்காரனாக மாறுகிறோம்.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால் நம்முடைய நோக்கம் நிறைவேற்றபட வேண்டுமானால் நம்முடைய எண்ணமும், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும். இதுவே நம்முடைய வாழ்வில் பணக்காரனாக மாற்றி வெற்றியடைய செய்கிறது என்கிறார்...இதுவே இப்புத்தகத்தில் கூறியுள்ள கருத்துக்களில் சுருக்கமாகும்.

பின்குறிப்பு:  இப்புத்தகத்தில் கூறியள்ள கருத்துக்கள் மட்டும் அதன் மூலம் நான் கற்றுகொண்ட தகவல்களின் தெகுப்பு தான் இந்த பதிவு..

No comments:

Post a comment