நான் யார் பக்கம் - ஜெய்முருகன்
தொடர்- 4
பெண் பார்த்துவிட்டு வீடு திரும்பியவன் அன்று இரவு முழுவதும் ஒரே குழப்ப நிலையிலே இருந்தான். அவளுக்கு நம்மள பிடிச்சதனால தான் இந்தளவு திட்டம்போட்டு நம்மள வரவச்சிருக்காள். அது இருக்கட்டும் இதுக்கு முன்னாடி அவ நம்மள எங்க பார்த்திருப்பாள், எதனால நம்மள புடிச்சிருக்குனு சொல்றா ஒன்னுமே புரியலையே...
ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சிபோச்சி நம்மள சுத்தி நமக்கே தெரியாம ஏதோ நடத்திருக்கு அது மட்டும் உறுதி.. இருக்கட்டும் அது என்னானு நானே கண்டுபுடிக்கிறேன்... எது எப்படியிருந்தாயென்ன நாம எதிர்பார்த்த மாதிரி பொண்ணு நமக்கு கிடைச்சிட்டா அவளுக்கும், நம்மள புடிச்சிருக்கு அப்புறம் என்னா..! ஒரே ஜாலிதான்போ என்றவன்... கோடானகோடி நன்றி கடவுளே என்று கோடானகோடி நன்றி என்று சந்தோஷமாக சொல்லிகொண்டு உறங்கசென்றான்..
READ MORE: நான் யார் பக்கம் - நெடுந்தொடர் (தொடர்-3) CLICK HERE
அடுத்தநாள் காலையில் எழுந்தவன் அதே சந்தோஷத்தில் குளித்து, சாப்பிட்டு விட்டு நண்பர்களை பார்க்க புறப்பட்டான். அப்போது சமையல் அறையில் இருந்த அவன் அம்மாவின் சத்தம்கேட்டது. டே மகனே எங்க போனாலும் மதியத்துக்குள்ள வீட்டிற்கு வந்திரு, உங்க மாமா மதியம் இங்க வரதா சொன்னாரு என்று குட்டியை பார்த்து சத்திமிட்டாள்...
எது மாமாவா.! அவர் எதுக்குமா இங்க வராரு என்று குட்டி தெரியாத மாதிரி கேட்டான். ம்ம்ம்..அது ஒன்னுமில்லடா பக்கத்துவீட்டு பசுமாடு பாலுக்கு பதிலா பால்பவுடர தருதாம் அத்தான் அத என்னானு பாத்திட்டு போவோமுனு வராரு என நக்கலடித்தாள். எவன்டா இவன் எதுவுமே தெரியாதமாதரியே கேப்பான்.. மதியம் சீக்கிரம் வந்துசேரு கெளம்பு கெளம்பு என்றாள்... சரிமா இப்ப வரேன், மதியம் சீக்கிரமா வரே-னு சொல்லிவிட்டு ஜாலியா குதித்தவாறே வீட்டிற்கு வெளியே சென்றான்.
![]() |
நான் யார் பக்கம் - STORY |
அப்போது அங்கு வந்த அவனின் பள்ளிகூட தோழி (கனகா) குட்டியை பார்த்து என்னடா நான் கேள்விபட்டதெல்லாம் உண்மதாபோல, ஒரே சந்தோஷமா இருக்க என்றாள்.. அதுக்குள்ள எல்லாருக்கும் தெரிஞ்சிபோச்சா... ஆமா, உண்மதான், நீ எப்படி இருக்க, உன் குழந்த எப்படி இருக்கு என்று நலம் விசாரித்தான். நல்லாயிருக்கோம், எங்களயெல்லாம் கல்யாணத்திக்கு கூப்பிடுவியா, மாட்டியா என்று குட்டியை கலாய்த்தாள்..
அதற்கு அவனும், கண்டிப்பா கூப்படமாட்டேன் நீயே யாருகிட்டயாவது கல்யாண தேதி என்னானு கேட்டு வந்துசேரு என நக்கலடித்தான். அதையும் பாக்குறேன், எங்களுக்கு சொல்லாம நீ எப்படி கல்யாணம் செய்யுறேனு.. சரி எனக்கு சமைக்க நேரமாச்சி நான் கிளம்புறேன். அப்புறம் பார்ப்போம் என்று நடந்தாள். கிளம்பு, கிளம்பு.. என்று இவனும் அங்கிருந்து புறப்பட்டான்.
READ MORE: நான் யார் பக்கம் - நெடுந்தொடர் (தொடர்-2) CLICK HERE
நண்பர்கள் நான்கு பேரும் கூடும் இடமான தோஸ்த் கட்டிங்கடைக்கு வந்தான் குட்டி... வாடா, எப்புடி... என் கட்டிங்க,, பார்த்தவுடனே பொண்ணு ஒகே சொல்லிட்டா பாத்தில்ல என்று தன்னைதானே பெருமையா பேசிகொண்டான். குட்டி, போதும் உன் விளம்பரம்... பேச்ச குறசிட்டு வேலைய பாருயா என்றவன், பசங்க யாராவது வந்தாங்களா என்றான்...
இல்லடா இனிமேல்தான் எல்லாரும் வருவாங்க, அதுஇருகட்டும், பொண்ணு போட்டோவ எனக்கு கொஞ்சம் காட்றது என்று நச்சரித்தான் கட்டிங்கட தோஷ்த்..! யோ.. அப்படியெல்லாம் எதுவும் இல்லயா வேலைய பாருயா என்றான்.. டே, டே பொய்சொல்லாதடா, பொண்ணு வீட்லயிருந்து போட்டோ ஒன்னு கண்டிப்பா கொடுத்திருப்பாங்க, அந்த போட்டோ எங்கபோச்சி என்று இழுத்தார்...
![]() |
நான் யார் பக்கம் - (தொடர்-4) story |
இப்பதா என்றான் குட்டியும், அவன்களின் ஒருவன் கண்ணாடிய பார்த்து தலை சீவியவாறே யோய், இந்த கண்ணாடியெல்லாம் கொஞ்சம் துடிச்சிவைக்கமாட்டியா இப்படி தூசி படிஞ்சிருந்தா எப்படியா முகம் பாக்குறது என்று கடைகார தோஷ்த்தை வம்புக்கு இழுத்தான்.. கடைகாரனும் இவனுக்கு இணையாக, நா கண்ணாடி துடிக்கிறது இருக்கட்டும்.. நீ மொதல்ல உன் மூஞ்ச கழுவுடா... காலையில எழுந்து நேரா இங்க வந்திட்டு பேச்ச பாரு என்று சரிசமமாக வம்பிழுத்தனர்.. அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ உன் பொழப்ப பாரு என்று அவன் அமைதியானான்..
READ MORE: நான் யார் பக்கம் - நெடுந்தொடர் (தொடர்-1) CLICK HERE
இன்னெருவன் குட்டியை பார்த்து என்னடா உங்க வீட்டில பொண்ண பத்தி என்ன சொல்லுறாங்க என்று கேட்க... குட்டியும் சிரித்தபடியே வீட்ல ஒகே தான் மத்த விசியம் எதுவும் இப்போதிக்கு தெரியலடா.. மதியம் மாமா வரதா அம்மா சொன்னாங்க வந்தாதான் அடுத்து என்னானு தெரியும் என்றான். சூப்பர் விடு, இனிமேல் எல்லாம் நல்லதுதான் நடக்கும், அவங்க பாத்துப்பாங்க என்றான். குட்டியும் அதே மகிழ்ச்சியோடு சரி வாங்கடா கிரொவுண்டுக்கு போவோம் என்று கிளம்ப.. டே மச்சி கிரொவுண்டுக்கு அப்புறம் போவோம்.
முதல்ல எப்பவும் நம்ம பஸ் ஸ்டாப்பு தான் வா போவோம் என்றான். சரிவா என்று நாலுபேரும் கிளம்பினார்கள். அவர்களை பார்த்த கட்டிங்கடை நண்பன் டே நானும் வருட்டுமா என்றான். யோ ஒழுங்கா வேலையை பாருயா என்று அவர்கள் நான்கு பேரும் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார்கள்... அங்கு வந்து நின்று கொண்டு நான்கு பேரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்க. அப்போது அங்கு வந்த குட்டியின் தோழியான கனகாவின் தங்கை குட்டியை பார்த்து, அண்ணா எப்படி இருங்கிங்க என்று விசாரித்தாள்.
நான் நல்லா இருக்கேமா, நீ எப்படி இருக்க, காலேஜ் படிப்பெல்லாம் எப்படி போகுது என்று இவனும் பல கேள்வி கேட்டான். ம்ம்ம்... நல்லா போகுதுணா, இந்த வருசத்தோட காலேஜ் முடியபோகுது என்றாள். சூப்பர்மா என்று குட்டி அமைதியானான். அதன்பின் குட்டியை பார்த்து அண்ணா...! நீங்க பார்த்த பொண்ணு கூட எங்க கல்லூரிதான் என்றாள். என்ன சொல்ற அப்போ அவள உனக்கு தெரியுமா என்று வியப்புடன் கேட்டான். ம்ம்ம்... தெரியுமே, உங்களுக்கு அவள தெரியாதா..
அவ ஏற்கனவே பலமுறை நம்ம ஊருக்கு வந்திருக்கா.. மொதமுற நம்மூர் திருவிழாவிக்கு வந்தபோதே உங்க வீடு எங்கிருக்குனு எங்கிட்ட கேட்டாள்.. நான்தான் உங்க வீட்டையே அவளுக்கு காட்டினேன் என்றவள்...
![]() |
நான் யார் பக்கம் - (தொடர்-4) story |
நீங்க இதுக்கு முன்னாடி அவள பாத்ததில்லையா என்று கேட்க.. குட்டி சமாளித்தபடியே பாத்திருக்கேன் இங்க வந்தது எனக்கு தெரியாது என்று மழுப்பினான்.. சரி எதுக்கு எங்க வீட்டை கேட்டா என்று வேகமாக கேட்டான்.. நீங்க அவங்களோட சொந்தகாரங்கனு சொன்னா.. சரி எத்தன முறை இங்க வத்திருக்கா என்று குட்டி கேட்க நிறைய முறை வந்திருக்கா என்றவள்...
எதிர்முனையில் இருந்து அவளின் தோழி அவளை அழைக்கவே, ஒகே.. அண்ணா நா கிளம்பிறேன் என்று புறப்பட்டாள். குட்டியும், ம்ம்.. சரிமா அப்புறம் பார்ப்போம் என்றான். இப்பதான் இவனுக்கு கொஞ்ச, கொஞ்சமா புரியவருது அவ நம்மள பார்க்க எவ்வளவு ரிஷ்கெடுத்திருக்காள், ஆனால் நம்மால் ஒருமுறை கூட அவளை பார்க்கமுடியவில்லையே என நினைத்து வருத்தபட்டான்..
அப்போது அவனின் நண்பர்கள் ஜாலியாக பஸ்ஸில் போகும் பெண்களை சைட் அடித்துவிட்டு டே.. என்னா பேசியாச்சா கிரொவுண்டுக்கு போகலாமா என்றனர். அதற்கு இவனோ இல்ல, இல்ல நிங்க போங்கடா எனக்கு கொஞ்சம் வேல இருக்கு என்றான். சரி நாங்கபோறோம் என்று வண்டியை ஸ்டாட் செய்தார்கள், அவர்களை பார்த்த குட்டி டே எனக்கு ஒரு வண்டி தேவபடுது என்றான். அப்படியா..
சரி இதையே எடுத்துக்கோ என்றார்கள்.. டே அப்புறம் வண்டியை உங்க வீட்டிலே நிறுத்திடு நாங்க வந்து எடுத்திக்குறோம் என்றனர். சரி என்று இவனும் வண்டியை எடுத்து வேகமாக வீட்டிற்கு சென்று, இன்னிக்கு எப்படியாவது ரோஜாவ நேரடியா பார்த்து பேசவேண்டும் என முடிவெடுத்தவன்..
அம்மா, நான் கொஞ்சம் வேலயா டவுன் வரைக்கும் போய்டுவரேன் என்று பொய் சொல்லிவிட்டு வேகமாக துணியை மாற்றிகொண்டு புறப்பட்டான்.
READ MORE: The Alchemist By Paulo Coelho Book Review CLICK HERE
டே, டே சிக்கிரமா வாடா, இல்லனா உங்க மாமாவுக்கு என்னால பதில்சொல்ல முடியாது என்றாள். ம்ம்...சீக்கிரம் வந்துரேன் ஒருவேள, மாமா நேரமா வந்துட்டா,, கம்பெனிக்கு ஏதோ வேலயா மெயில் அனுப்ப போய்யிருக்கானு சொல்லு,, என்றவன் கண்ணாடிய பார்த்து இரு முறை தன் தலையை சரிசெய்து விட்டு ரோஜாவை பார்க்க அவள் வீட்டை நோக்கி புறப்பட்டான்....
No comments:
Post a comment