மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களில் மூன்றாம் புதல்வனாய் திகழ்பவன், வில் வித்தையில் சிறந்தவன், சிறந்த போர்குணம் கொண்டவன், கிருஷ்ணரின் நண்பன் என்ற பல திறமைக்கு சொந்தகாரன் அர்ஜூனன்..
துரோணாருக்கு எண்ணற்ற சிஷ்யர்கள் இருந்தபோதிலும் அர்ஜூனனே அவரின் முதன்மையான சீடனாக விளங்கினான். அதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் உண்டு. அவற்றில் ஒன்றை தற்போது பார்த்துவிட்டு ஏன் அர்ஜூனன் தன் குருவான துரோணரை எதிர்த்தான் என்பதை பார்ப்போம்..
ஒரு நாள் துரோணர் தன்னுடைய சிஷ்யர்களை அழைத்துகொண்டு ஆற்றங்கரைக்கு சென்றார். இன்று நான் உங்களுக்கு அஸ்திர மந்திரத்தின் மூலம் இந்த காட்டினை எப்படி அழிப்பது என்று கற்றுதரபோகிறேன். அனைவரும் கவனமாக கேளுங்கள் என்றவர் அந்த ஆற்றங்கரை மண்ணில் ஒரு மந்திரத்தை எழுதினார்.
அப்போது தன் அருகில் இருந்த அர்ஜூனனை அழைத்து எனது கமண்டத்தை(துண்டு) பாடசாலையிலே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். உடனடியாக அதை நீ எடுத்துட்டு வா என்று அர்ஜூனனை அனுப்பினார். முக்கியமான பாடம் கற்றுகொள்ள முடியால் தடைபடுகிறதே என்னசெய்வது என்று புரியாமல் இருந்த அர்ஜூனன் இருமனதோடு வேகமாக சென்று பாடசாலையில் இருந்த கமண்டத்தை எடுத்துவந்தான்.
அர்ஜூனன் வருவதற்குள் பாடம் முடித்துவிட்டு. அனைவரும் தான் கற்றுகொண்ட அஸ்திர மந்திரத்தினை கொண்டு ஒவ்வொருவராக காட்டை நோக்கி அம்பை எய்தனர். ஆனாலும் காடு தீப்பற்றவில்லை இதனால் மனமுடைந்த துரோணர் சற்று சோர்வடையும் நிலைக்கு ஆளானார்.
குருவின் நிலையை உணர்ந்த அர்ஜுனன் கடைசியாக நான் முறை முயற்சி செய்கிறேன் குருவே என்றான். இதைகேட்ட கௌரவர்கள் உட்பட அனைவரும் சிரித்தனர். பாடத்தை கற்ற நம்மாலே முடியவில்லை. இவன் என்ன செய்யபோகிறான் என்று கேளி செய்தனர். குருவும் சரி நீ ஒரு முறை முயற்சி செய் என்றார்.
READ MORE: கர்ணன் செய்த கடைசி கொடைவள்ளல் என்னவென்று தெரியுமா ? CLICK HERE
குருவின் கட்டளையை ஏற்ற அர்ஜுனன் வில் அம்பை எடுத்து மந்திரம் முணங்கியபடி அம்பை எய்தான். காடு மளமளவென்று தீப்பற்றி எரிந்தது, அனைவரும் ஒன்றும்புரியாமல் திகைத்தனர். இதை கண்ட துரோணர் மகிழ்சியடைந்து எப்படி இதை செய்தாய் அர்ஜூனா என்று கேட்டார்.
அர்ஜூனனோ நான் உங்களின் கமண்டத்தை கொண்டுவர பாடசாலை சென்று திரும்பியபோது ஆற்றங்கரை மண்ணில் நீங்கள் எழுதிய அஸ்திர மந்திரத்தை படித்தேன். அதை இங்கே முனுமுனுத்த படியே அம்பை எய்தேன் குருவே என்றான். அவனை பார்த்து துரோணர் மெய்சிலிர்த்து போனார். இப்படி ஒரு சிறந்த சீடன் இருப்பதை கண்டு நான பெருமிதம் அடைகிறேன் என்று அவனை தட்டிகொடுத்தார்.
இப்படிபட்ட திறமை கொண்ட அர்ஜூனன் குருசேத்திர போரில் தன் குருவான துரோணரை எதிர்க்கும் சூழ்நிலை உருவானது. குருசேத்திர போரில் அர்ஜூனன், கௌரவர்கள் படையில் இருந்த பீஷ்மனை அழித்துவிட்டான். இதை கேட்டதும் கௌரவர்களுக்கு பெரிய கலக்கம் உண்டானது.
நாம் இப்போது என்னசெய்வது, நாம் அடுத்து யார் தலமையில் போர் புரிவது என்று குழப்பத்தில் இருந்தான் துரியோதனன். அப்போது அவர்களுக்கும் குருவான துரோணாரை பார்த்து, நீங்கள்தான் தலைமை ஏற்று எங்களை வழிநடத்த வேண்டும்.
குருவை எதிர்த்த சிஷ்யன்..
அதனை பாண்டவர்களுக்கு எதிராக போர்புரிய படைகளத்தில் தயார்படுத்தினார். எதிர் அணியில் இருக்கும் துரோணரை பார்த்த அர்ஜூனன், தன் குருவை எதிர்த்து எப்படி போர் புரிவது என்று குழம்பியபடி நின்றான். இதை கண்ட துரோணர் அர்ஜூனனுக்கு சம்மதம் தெரிவிக்க குருவிடம் தலை வணங்கி, போரை தொடர்ந்தான்.
READ MORE: குருசேத்திர போருக்கு காரணமாக அமைந்த தர்மனின்
செயல். CLICK HERE
போரில் அர்ஜூனன் அம்பில் இருந்து வரும் ஒவ்வொரு வில்லும் கௌரவர்கள் படையினை தரைமட்டமாக்கியது. கால சம்ஷார மூர்த்தி அவதாரம் எடுத்த அர்ஜூனன் வில்லின் வேகத்தை மேலும் பல மடங்கு அதிகபடுத்தி எதிரிகளை சூரையாடினான்.
இவனின் போர்திறமையை கண்ட கௌரவர்கள் அர்ஜூனனின் அம்பு மட்டும் எப்படி, எங்கள் அம்பை விட பல மடங்கு சக்தி வாய்த்தாக உள்ளது என்று துரோணரிடம் வாதாடினார்கள். துரோணரோ அது ஒன்றுமில்லை அர்ஜூனன் வனவாசம் சென்றபோது அங்கு அவன் செய்த தவத்தால் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணு அவனக்கு வரமாக அளித்ததுதான் காரணம் என்றார்.
அர்ஜூனன் வரம்பெற்ற அந்த வரத்தை பயன்படுத்தாமல் இருக்க நீங்கள் அனைவரும் அவனை தடுக்கவேண்டும் என்றார். கௌரவர்கள் பக்கம் இருந்த துரியோதனுக்கு பக்க பலமாக கர்ணன், சகுனி, அஸ்வத்தாமன் என பலர் இருந்தும் அர்ஜூனனை எதிர்த்து அவனுடைய வலிமையை குறைக்க யாராலும் முடியவில்லை.
இதையெல்லாம் கவனித்த துரோணர் தன்னுடைய சிஷ்யனான அர்ஜூனன் செயயும் போர் திறமை கண்டு இரசித்தபடியே மெய்சிலிர்த்து போனார்..
No comments:
Post a comment