Tuesday, 14 July 2020

கர்ணன் செய்த கடைசி கொடைவள்ளல் என்னவென்று தெரியுமா ?


நாயகன் படத்தில் வரும் கமலை பார்த்து, "நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா" என கேட்பதுபோல கர்ணனை பார்த்து இந்த வசனத்தை கேட்டால் எனக்கு தெரியலையே.. என்றுதான் பதில் வரும். ஏன்? என்றால்.. கர்ணன் இருக்கும் இடமும் அவன் செய்யும் செயலும் அவனை முற்றிலுமா மாற்றுகிறது. அதாவது, நாயகன் படத்தில் வரும் கமல் எப்படி மக்கள் பார்வையில்  நல்லவராகவும், அதே நேரத்தில் சட்டத்தின் பார்வையில் கெட்டவராகவும் தெரிகிறாறோ, அதே நிலைமைதான் மகாபாரதத்தில் கர்ணனுக்கும்.


 அவன் கௌரவர்கள் பக்கம் இருந்ததால் கெட்டவனாகவும் அதே நேரத்தில் தன்னுடைய கொடைவள்ளல் குணத்தால் நல்லவனாகவும் மக்களால் பார்க்கபடுகிறான். இவனிடம் வந்து, யார் எதை கேட்டாலும் இல்லை என்று ஒரு போதும் மறுத்தது கிடையாது. கர்ணனின் இந்த கொடைவள்ளல் குணம் பற்றி இன்று வரை பல இடங்களில் உதாரணமாக பேசபடுகிறது. சரி அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்..

யார் இந்த கர்ணன் என்று கேட்பவர்கள் ? மகாபாரதம் என்ற புராணத்தை பற்றி தெரியாமல் இருக்காது. அந்த மகாபாரதத்தை படித்தவர்களுக்கு கர்ணனை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..

சூரியன் மற்றும் குந்தியின் மகனாக, பிறக்கும்போதே போர்கவசத்துடன் பிறந்தவன் தான் இந்த கர்ணன். பாண்டவர்களின் ஒருவனாக இருந்திருக்கவேண்டியன். மாறாக கௌரவர்களின் பக்கம் சென்றுவிட்டான். கொடை வள்ளல், வில்வீச்சில் சிறந்தவன், போரில் அர்ஜூனனை வீழ்த்தும் வலிமை கொண்டவன் என்று பல திறமைகளுக்கு சொந்தகாரன்.

 கிருஷ்ணன் மற்றும் பீஷ்மரே இவனின் போர் திறமையை பார்த்து பாராட்டும் அளவுக்கு வீரத்தில் சிறந்து விளங்கியவன். அப்படிபட்ட இந்த கர்ணனை யாராலும் அழிக்கமுடியாது என்பதை உணர்ந்த கிருஷ்ணன் கர்ணனின் கொடைவள்ளல் குணத்தை குருசேத்திரபோரில் பாண்டவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான்.

READ MORE: குருசேத்திர போருக்கு காரணமாக அமைந்த தர்மனின் செயல்.  CLICK HERE

அதாவது போர் நடைபெறுவதற்கு முன்பு குந்தியை கர்ணனிடம் தூது அனுப்பினான். கர்ணனை சந்தித்த குந்தி நான்தான் உன்னுடைய தாய் என்றும் பாண்டவர்கள் அனைவரும் உன்னுடைய சகோதர்கள் என்றும் எடுத்துரைத்தாள். பாண்டவர்களின் மூத்தவனான நீ அவர்களை எதிர்த்து போர்களத்தில் நிற்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.


நீ பாண்டவர்களுடன் சேர்ந்து போர்புரிந்து வெற்றிபெற்று இந்த நாட்டை நீயும் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆளவேண்டும் என்று கூறினால். அதற்கு மறுப்பு தெரிவித்த கர்ணன் நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தாலும் என்னால் அதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது.

 ஏனென்றால் கூடியிருந்த சபையில் நான் யார் என்று எல்லாரும் என்னை பார்த்து கேட்டபோது என்னசொல்வதென்று தெரியாம நின்றேன். அப்போது எனக்காக முன்வந்து நின்றானே துரியோதனன் அவனை என்னால் ஒருபோதும் விட்டுகொடுக்க முடியாது என்று வாதாடினான்.

இதைகேட்ட குந்தி, சரி உன்னுடைய விருப்படியே செய். ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள், நீ போரில் அர்ஜூனன் மீது ஒருமுறை மட்டுமே அம்பு தொடுக்கவேண்டும் என்று கர்ணனிடம் சத்தியம் வாங்கினால் குந்தி.. அதற்கும் சம்மதம் தெரிவித்தான் கர்ணன்.  தீயவர்கள் பக்கம் இருந்தாலும் தன்னுடைய நேர்மையை ஒருபோதும் விட்டுகொடுக்க தவறியதில்லை கர்ணன்.

இதையொல்லாம் முன்கூட்டியே கணித்திருந்த கிருஷ்ணன் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தமக்கு வேறு வழி தெரியவில்லை.. அதனால் போரில் கர்ணனை அழித்தால் மட்டுமே கௌரவர்களை கொன்று தர்மத்தை நிலைநாட்டி முடியும் என்று முடிவெடுத்தான். அதன்பின்தான் இந்த நாட்டை பாண்டவர்கள் தர்மத்தின் வழியில் வழிநடத்துமுடியும் என நம்பினான் கிருஷ்ணன்.

READ MORE: மகாபாரதத்தில் துரியோதனன் மற்றும் கர்ணனின் நட்பு பற்றி சில உதாரணம்CLICK HERE

கர்ணனிடம் இருக்கும் குண்டகவசத்தை பறிக்க இந்திரன் பிராமணர் போல் வேடமிட்டு கர்ணனிடம் சென்று எனக்கு இந்த கவசமும், குண்டலமும் தானமாக வேண்டும் என்று கேட்டார். வந்தது யார் என்பதை அறித்துகொண்ட கர்ணன் தானத்தில் என்னைவிட சிறந்தவன் யாரும் இல்லை என்பதை அவனுக்கு உணர்த்த அவன் கேட்ட அனைத்தையும் வழங்கினான்.

தன்னிடமிருந்த கவசத்தை கொடுத்துவிட்டு ஏதும் இல்லாத நிராயதபானியாக நின்றான் கர்ணன். அதன்பின் போர்களத்தில் வில் அம்பு மூலம் கர்ணன் நெஞ்சை பிளந்தான் அர்ஜூனன். ஆனாலும் கர்ணன் செய்த தானம் அவன் உயிரை கடைசிவரை காப்பாற்றியது. இதை பார்த்து ஆச்சிரியமடைந்த கிருஷ்ணன், வயது முதிர்ந்த முனிவர் போல் வேடமிட்டு கர்ணன் அருகில் சென்று..

கர்ணன் செய்த கடைசி கொடைவள்ளல் 

கர்ணா இந்த ஏழைக்கு எதாவது தானம் கொடு என்று கேட்க உயிர் போகும் இந்த நிலமையில் என்னிடம் என்ன உள்ளது, உனக்கு நான் கொடுக்க என்று கர்ணன் கேட்க..அதற்கு அந்த முனிவரோ நீ தர்மத்தின் மூலம் பெற்ற புண்ணியங்கள் அனைத்தையும் எனக்கு கொடு என்று கேட்டான்.

உயிர் போகும் நிலையில் உள்ள கர்ணனே,, தன்னுடைய மார்பு பகுதியில் உள்ள அம்பை வெளியே எடுத்து மார்பு பகுதியில் வடிந்த இரத்தத்தை எடுத்து இதுதான் நான் பெற்ற அனைத்து தர்மத்தின் பலன் என்று முனிவரிடம் இரத்தத்தை கொடுத்தான். அதன்பிறகே கர்ணனின் உயிர் பிரிந்தது. இவ்வாறு தான் இறக்கும் தருவாயிலும் தன்னிடம் வந்து கேட்பவர்களுக்க இல்லை என்று கூறாமல் தர்மம் செய்தவன்தான்  இந்த கர்ணன்.

 தன் உயிர்போகும் என்றும் தெரிந்தும் அதைபற்றி  கவலைபடாமல் தன்னிடமிருந்த தர்மத்தின் பலன் உட்பட அனைத்தையும் கொடுத்து உதவினான். கர்ணன் இருந்த இடம் தவறாக இருந்தாலும் அவனின்  செயல் அனைவரையும் வியப்படையவைத்தது. 

இதைதான் கர்ணன் திரைபடத்தில் மிக அழகாக கூறியிருப்பார்கள்..

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
                          வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா என்று...

READ MORE:  நான் யார் பக்கம் (தொடர்-1) - நெடுந்தொடர்CLICK HERENo comments:

Post a Comment