Thursday, 9 July 2020

குருசேத்திர போருக்கு காரணமாக அமைந்த தர்மனின் செயல்.


பாண்டவர்களை எப்படி பழிவாங்குவது என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் சகுனி. அந்த சமயம்பார்த்து, ஒரு யாசகன் தன்னுடைய மடத்தில் யாகம் ஒன்று செய்வதற்காக  நூறு பசுமாடுகளை தேடிகொண்டிருந்தான். அந்த நூறு பசுக்களும் எந்த வித கருபுள்ளியும் இல்லாமல், வெண்மை நிறத்தில் இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி அவைகள் அனைத்தும் பால் தரகூடியதாக இருக்கவேண்டும் என்ற எராளமான கட்டுபாடுகளுடன் அவன் பசுக்களை தேடினான்.


அவ்வாறு இவன் தேடியபோது பாண்டவர்களின் மடிவாசலில் அவன் எதிர்பார்த்ததை போல் 21 பசுமாடுகளை கண்டான். இதனை பாண்டவர்களிடம் இருந்து எப்படி பெறுவது என்று யோசித்தவன், தர்மனை தன்னுடன் பகடை விளையாட வருமாறு அழைத்தான். அதற்கு சம்மதம் தெரிவித்த தர்மன், யாசகனை பார்த்து பந்தயத்தில் 'நீ எதை வைத்து விளையாட போகிறாய் என்று கேட்டான்'.  என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான் யாசகன்.

சரி எதற்கு யோசனை  இந்த பூவை வைத்து விளையாடு என்று இருவரும் விளையாட தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் யாசகன் எதிர்பார்த்ததை போல் தர்மனிடம் இருந்த 21 பசுமாடு களையும் பந்தயத்தில் வென்றுவிட்டான். அதன்பின்பு இதேபோல் ஒவ்வொரு இடமாக சென்று சூதாடி மொத்தம் 87 பசுமாடுகளை 
வென்றுவிட்டான்.

இன்னும் 13 பசுமாடுகளுக்கு என்ன செய்வது என்று யோசித்தவாறு அழைந்து தேடியவன், துரியோதனன் அரண்மனை மடிவாசலில் பசுமாடுகள்  இருப்பதை அறித்துகொண்டான். அதை எப்படி கைபற்றுவது என்று யோசித்தவனுக்கு,  ஒரு தகவல் கிடைத்தது. அதாவது துரியோதனன் குதிரைகள் மீது அதிக ஈர்ப்பு கொண்டவன்  என்றும் யாருடைய குதிரையாக இருந்தாலும் அதை தன்வசம் இழுத்து கொள்வான் என்றும்  யாசகன் அறித்து கொண்டான்.

READ MORE:  மகாபாரதத்தில் துரியோதனன் மற்றும் கர்ணனின் நட்பு பற்றி சில உதாரணம்   CLICK HERE

அதன் பின் துரியோதனன் இருக்கும் இடத்திற்கெல்லாம் கருப்பு நிற குதிரையிலே வலம் வர தொடங்கினான். இதை கவனித்த துரியோதனன், அந்த குதிரையை எப்படியாவது அடைய நினைத்து யாசகனை தன் இடத்திற்கு அழைத்து அவனிடம் தான் பகடை ஆடவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தான்.


குருசேத்திர போருக்கு காரணமாக அமைந்த தர்மனின் செயல்.

இதற்கு ஒப்புகொண்ட யாசகன் சூதாட்டத்தில் பந்தயமாக பசுமாடுகளை கேட்டான். துரியோதனனும் சரியொன்று கூற, இருவரும் விளையாட தொடங்கினார்கள். ஆட்டத்தின் முடிவில் தன்னுடைய பசுமாடுகள் அனைத்தையும் இழந்தான் துரியோதனன். தனக்கு தேவையான நூறு பசுமாடுகள் கிடைந்தவிட்டது, என்ற மகிழ்ச்சியில் யாகம் செய்வதற்கு மடத்திற்கு திரும்பினான் யாசகன்.

சூதாட்டத்தில் தோற்றதை நினைத்து கடும்கோபமடைந்த துரியோதனன் நடந்த சம்பவத்தை சகுனியிடம் எடுத்து கூறினான். சகுனியோ யார் அந்த யாசகன் அவனை உடனை இங்கு அழைத்து வாருங்கள் என்று காவலர்களுக்கு கட்டளையிட்டான். சகுனி அணையின்படி யாசகனை சகுனியிடம் ஒப்படைந்தார்கள் காவலர்கள். யாசகனை பார்த்த சகுனி உன்னுடைய திறமையை நான் பாராட்டுகிறேன்.

 அதே நேரத்தில் 13 பசுமாடுகளுக்கு பதிலாக 14 பசு மாடுகளை அழைத்து சென்றுவிட்டாய் இது முற்றிலும் தவறு என்றான். புரியாத நிலையில் இருந்த யாசகனை பார்த்த சகுனி  நீ அழைத்து சென்ற 13 பசுவில் ஒன்று கன்று ஈன்றும் நிலையில் உள்ளது. அந்த கன்று எங்களுக்கு சொந்தமானது, அதை எங்களிடம் கொடுத்துவிடு என்றான். அதற்கு நான் என்ன செய்வது இது எப்படி என்னுடைய தவறாகும் என்று முறையிட்டான் யாசகன்.

 சரி நீ ஒன்றும் செய்ய தேவையில்லை அந்த பசு கன்றை ஈட்டபின்பு உன்னுடைய பசுமாட்டினை தாராளமா அழைத்து செல், இல்லையொன்றால்... அந்த கன்றை உனக்கு சொந்தமாக்க என்னுடன் ஒரு முறை  பகடை விளையாடு என்று அவனை திசைதிருப்பினான். சகுனியின் பலம் அறியாமல் யாசகனோ, சூதாட்டத்திற்கு ஒப்புகொண்டான். சகுனி பகடையை உருட்ட அவனின் விருப்ப படியே பகடை எண் விழந்தது..

 யாசகனிடமிருந்த குதிரை உட்பட, மொத்த பசுமாடுகளையும் சகனி வென்று விட்டான். வெறுகையுடன் திரும்பிய யாசகனை பார்த்து, இதில் யாரிடம் அதிக பசுக்களை வென்றாய் என கேட்டான்.. தர்மனிடம் தான் அதிக பசுக்களை வென்றேன் என்று யாசகன் கூறினான்.

இதை கேட்ட சகுனி ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, யாசகனை அருகில் அழைத்து நீ பகடையில் தோற்ற அனைத்தும் உனக்கே என்று அவனிடமே மீண்டும் அனைத்தும் கொடுத்துவிட்டு அவனை அனுப்பிவைத்தான். அங்கு நடப்பதையெல்லாம் கவனித்த, துரியோதனன் ஒன்றும் புரியாமல் குழம்ப நிலையில் இருந்தான். இதை கவனித்த சகுனி என்ன யோசிக்கிறாய் துரியோதனா நாம் பாண்டவர்களை வெல்ல நல்ல யோசனை கிடைத்து விட்டது என்றான்.

என்ன யோசனை மாமா என்று ஆர்வமாக கேட்டான் துரியோதனன்.  நாம் பாண்டவர்களை போர்களத்தில் எதிர்த்து நின்று வெல்வது கடினம். அதற்கு பதிலாக அவர்களை சூதாட்டத்திற்கு அழைத்து பகடையின் மூலம் அவர்களை தோற்கடித்து இந்த நாட்டை விட்டே வெளியேற்றிவிடலாம் என்றான்.

READ MORE:   The Science of Getting Rich Book Summary  CLICK HERE

 இதை கேட்ட துரியோதனன் மிக அருமையான ஆலோசனை மாமா நான் உடனை இதற்கு ஏற்பாடு செய்கிறேன். இவர்களின் சதிவலையை அறியாத தர்மன், சூதாட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்க அதன் விளைவாக பாண்டவர்கள் அனைவரையும் பகடையில் இழந்துவிட்டு, அதன்பின் தன்னுடைய நாட்டை விட்டே வெளியேறினார்கள் பாண்டவர்கள்...

அதன்பின்பு அவர்கள் மீண்டும் நாடு திரும்பியதும், தன்னுடைய நாட்டை தாருங்கள் என்று கேட்க, அதற்கு முடியாது என்று துரியோதனன் மறுப்பு தெரிவிக்க, அது குருசேத்திர போருக்கு காரணமாக வழிவகுத்தது...

தர்மனின் இந்த சிறிய செயலால் மகாபாரதத்தில் மிக பெரிய குருசேத்திரபோர் உருவாக்கி மாபெரும் விளைவை உண்டாக்கியது...

READ MORE:   நான் யார் பக்கம் (தொடர்-2) - நெடுந்தொடர்  CLICK HERE


No comments:

Post a Comment