The Seven Habits of Highly effective people Book Review In Tamil...
புத்தகம் -- அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் ஏழு பழக்கங்கள்.
ஆசிரியர் -- ஸ்டீபன் ஆர். கவி
அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் ஏழு பழக்கங்கள் என்ற இந்த புத்தகமானது 35 மொழிகளில் மொழிமாற்றம் செய்யபட்டு சுமார் ரூ 2.5 கோடிக்கு மேல் விற்பனையாகி அதிக வாசிக்கபட்ட புத்தகங்களில் ஒன்றாக உள்ளது.
இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதின் மூலம் நாம் நம் தொழில் மற்றும் குடும்ப வாழ்வு என அனைத்தையும் சரியான முறையில் கையாள தெரித்துகொள்ள முடியும் என்கின்றன.
நீ இந்த சமூகத்தை மாற்ற விரும்பினால் முதலில் நீ மாறவேண்டும். மாற்றத்தை உன்னிடமிருந்தே தொடங்கு என்ற சுருக்கமாக வரியுடன் இதனை நாம் புரிந்துகொள்ளலாம்...
இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அந்த ஏழு பழக்கங்கள்.
1. முன் யோசனையுடன் செயல்படுதல் ( Be Proactive )
2. முடிவை வைத்து துவங்குதல் ( Begin with the End in Mind )
3. முதலில் செய்ய வேண்டியதை முதலில் செய்தல் ( Put First Things First )
4. எனக்கும் வெற்றி உனக்கும் வெற்றி ( Think Win-Win )
5. முதலில் புரிந்துகொள்ளுதல் பின்னர் புரிய வைத்தல் ( Seek First to Understand Then to be Understood )
6. கூட்டு இயக்கம் ( Synergize )
7. இரம்பத்தை கூர்படுத்துதல் ( Sharpen the Saw )

எப்படியாபட்டவர்களையும் மாற்றகூடிய அந்த ஏழு பழக்கங்கள் என்னவென்று சுருக்கமாக பார்ப்போம்.
READ MORE: நான் யார் பக்கம் Click Hrere
READ MORE: நான் யார் பக்கம் Click Hrere
1. முன் யோசனையுடன் செயல்படுதல் ( Be Proactive )
நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கு முன்பும் அதை தீர ஆராய்த்து பின்பு அச்செயலில் ஈடுபடவேண்டும்.
அதாவது நம்முடைய சுயசித்தனைகளை வளர்த்து கொள்வதின் மூலம் நம்முடைய பார்க்கும் கண்ணோட்டமானது முற்றிலும் மாறுபடுகிறது.
இது நம்முடைய ஆளுமை திறமையை வளர்த்துகொள்ள உதுவுகிறது. மேலும் நம்முடைய சுயசிந்தனை வலிமை பெற இந்த கூற்று சாதகமாக உள்ளது. ( வருமுன் காப்பதே மேல்... )
2. முடிவை வைத்து துவங்குதல் ( Begin with the End in Mind )
நம்முடைய வாழ்க்கையில் அடுத்து பத்து வருடங்கள் கழித்து அல்லது நாம் இறக்கும் தருவாயில் உள்ளபோது நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை பற்றி என்ன பேசவேண்டும் என்று விரும்புகிறமோ அதற்கான வழியில் தான் நாம் தற்போது பயணித்துகொண்டு இருக்கிறோமா என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதாவது நம்முடைய முடிவு என்னவாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறமோ அதற்கான தொடக்க புள்ளியை நாம் தற்போது தொடங்கவேண்டும். இவ்வாறு செயல்படுவதால் நம்முடைய இலட்சியம் அல்லது வாழ்வின் நோக்கம் என்ன என்பதை நாம் உணர்த்து அதற்கான முயற்ச்சியில் நாம் ஈடுபடவோம்.
3. முதலில் செய்ய வேண்டியதை முதலில் செய்தல் ( Put First Things First )
அதாவது நம் வாழ்வின் நோக்கம்/ இலட்சியம் எதுவோ, அதற்காக இன்று நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பதை உணர்தல்.
தேவையில்லாத வேலைகளை செய்வதன் மூலம் நம்முடைய நேரமானது வீணாகிறது. இதனால் நமக்கு பிடித்த நம் வாழ்க்கையை உருவாக்குவதற்கு போதிய நேரமில்லாமல் அவை வீணாக தடைபடுகிறது.
4. எனக்கும் வெற்றி உனக்கும் வெற்றி ( Think Win-Win )
தேவையில்லாத வேலைகளை செய்வதன் மூலம் நம்முடைய நேரமானது வீணாகிறது. இதனால் நமக்கு பிடித்த நம் வாழ்க்கையை உருவாக்குவதற்கு போதிய நேரமில்லாமல் அவை வீணாக தடைபடுகிறது.
![]() The Seven Habits of Highly effective people Book Review In Tamil |
அனைத்து வெற்றியும் ஒருவரின் தனிபட்ட வெற்றி என்று நாம் எப்போதும் ஏற்றுகொள்ளமாட்டோம். ஒவ்வொருவரின் வெற்றியிலும் மற்றொருவரின் பங்கு அல்லது ஈடுபாடு நிச்சயம் உள்ளது.
அதேபோல் ஒரு நிர்வாகத்தின் வெற்றியானது அங்கு பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பை பொருத்து மாறுபடுகிறது. நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் நம்மை சுற்றியுள்ளவர்களும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டால் அனைவரும் நிச்சயம் வெற்றியடையமுடியும்.
வெற்றி உனக்கா, எனக்கா என்று போராடாமல் நமக்குதான் என்று போராடுவது வெற்றக்கான சிறந்த வழியாக கருதுகின்றன.
வெற்றி என்பது கடின உழைப்பு, பணிவு, ஒழுக்கம், போன்ற ஒருவரின் தனிபட்ட குணநலன்களுடன் இணைந்த மற்றவர்களின் ஆளுமை, நெறிமுறை, திறமை, சமூக கருத்து, பரிமாற்றம் போன்றவற்றை அடிபடையாக கொண்டு அமைகிறது.
5. முதலில் புரிந்துகொள்ளுதல் பின்னர் புரிய வைத்தல் ( Seek First to Understand Then to be Understood )
ஒரு செயலை மற்றவர்களுக்கு புரியவைப்பதற்கு முன்னால் அதற்கான தெளிவான விளக்கத்தினை நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதாவது அந்த செயிலினை நாம் பார்க்கும் கண்ணோட்டத்திற்கும் மற்றவர்கள் பார்க்கும் கண்ணோட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
இருவரின் புரிதலும் முற்றிலும் மாறுபடும். அதவாது நாம் எவ்வாறு இந்த உலகினை பார்க்கிறோம் என்பதை நமக்கு இது உணர்த்துகிறது. அதன்பின் நாம் பார்த்து புரிந்துகொண்டதை மற்றவர்களுக்கு புரியவைப்பதின் மூலம் அவர்களின் கண்ணோட்டமும் மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இருவரின் புரிதலும் முற்றிலும் மாறுபடும். அதவாது நாம் எவ்வாறு இந்த உலகினை பார்க்கிறோம் என்பதை நமக்கு இது உணர்த்துகிறது. அதன்பின் நாம் பார்த்து புரிந்துகொண்டதை மற்றவர்களுக்கு புரியவைப்பதின் மூலம் அவர்களின் கண்ணோட்டமும் மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
6. கூட்டு இயக்கம் ( Synergize )
நம்முடைய நோக்கத்தின் வெற்றிக்காக ஓடும் நாம், நம்மை சுற்றியுள்ளவர்களையும் நம்முடன் சேர்ந்துகொண்டு அவர்களையும் உற்சாகபடுத்தி நம்முடன் செயலாற்ற ஈடுபடுத்திகொள்ள வேண்டும்.இது நம்முடைய குணநலன்களை மாற்றிவது மட்டுமல்லாமல் அனைவரின் குணநலத்தினையும் மாற்றி ஒரு
நேர்மறை தாக்கத்தை உண்டாக்கிறது.
பின்பு இந்த வெற்றி அனைவரின் வெற்றியாக அமைகிறது. அதாவது நம்முடைய இந்த மாற்றமானது நம்முடைய சமூகத்தைய மாற்றும் ஒரு தூண்டுகோளாக அமைகிறது. ( கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.. இதற்கு பொருந்துமா....சும்மா எழுதிவைப்போம் )
நேர்மறை தாக்கத்தை உண்டாக்கிறது.
பின்பு இந்த வெற்றி அனைவரின் வெற்றியாக அமைகிறது. அதாவது நம்முடைய இந்த மாற்றமானது நம்முடைய சமூகத்தைய மாற்றும் ஒரு தூண்டுகோளாக அமைகிறது. ( கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.. இதற்கு பொருந்துமா....சும்மா எழுதிவைப்போம் )
7. இரம்பத்தை கூர்படுத்துதல் ( Sharpen the Saw )
முதலில் நம்முடைய திட்டத்திற்காக கூர்மைபடுத்துதல் பின்பு செயலில் ஈடுபடுதல் என்பதை குறிக்கும்.
எந்த செயலை செய்வதற்கு முன்பும் அதற்கான கால அவகாசத்தினை கருத்தில் கொண்டு, அதை எவ்வாறு, எப்படி திறன்பட செயல்படுத்த முடியும் என்பதை திட்டமிடுதல் வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நாம் திட்டமிட்டதை விட முன்னதாகவே இச்செயலினை சிறப்பாக செய்து முடிக்கமுடியும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட வாய்புள்ளது. இது நம்முடைய வெற்றியை நோக்கி செல்ல தேவையான நேரத்தை குறைக்கிறது.

பின்குறிப்பு.
இந்த தொகுப்பானது இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவல் மற்றும் அதனுடன் நான் கற்றுகொண்ட சிலவற்றையும் சேர்த்து உருவாக்கபட்டவை...
No comments:
Post a comment