Thursday, 11 June 2020

Kutra Parambarai By Vela Ramamoorthy Book Review


                       Kutra Parambarai by Vela Ramamoorthy Book Review in Tamil.

        புத்தகம் - குற்றப்பரம்பரை
     ஆசிரியர் - வேல ராமமூர்த்தி

திரு வேலராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற புத்தகம் சமிபகாலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு காரணம். இப்புத்தகத்தை திரைபடமாக்க சில இயக்குனர்கள் முயற்சி செய்து வருவதால் அப்படி அப்புத்தகத்தில் என்னதான் இருக்கிறது என்ற ஆவல் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.


கடந்த நூற்றாண்டில் நடந்த சில உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அப்பகுதி மக்களின் மொழிநடையில் எழுதியிருக்கியிருப்பது இப்புத்தகதின் கூடுதல் சிறப்பு. இதனை  ஜயா வேலராமமூர்த்தி அவர்கள் மிக கச்சிதமாக செய்திருக்கிறார்.
ஜாதி என்ற தீயசக்தியால் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள், பெண்களுக்கு நடந்த வன்மங்கள் போன்றவற்றை மறைமுகமின்றி எழுதியிருக்கிறார்.

இப்பத்தகத்தை வாசிக்கும்போது நம்மை அறியாமல் நம் மனம் அந்த சூழ்நிலையில் வசித்தது போல் சோகத்திற்க்கு உட்படுகிறது.
சாதி அடக்குமுறை மற்றும் கைரேகை சட்டம் போன்றவற்றையும் இதில் கூறபட்டுள்ளது.
இப்புத்தகத்தின் மைய கருத்து மற்றும் கதையை சுருக்கமாக பார்ப்போம்.
வேயன்னா... எப்படியாவது தப்பித்து ஓடுடா என்ற கூழானி தாயின் குரலில் இக்கதை ஆரம்பமாகிறது.வேயன்னா மற்றும் அவரின் கூட்டத்தினை அழிக்க வெள்ளையர்கள் ஒரு  தனிபடைபோலிஸை அமைத்து தேடுகின்றன.

அவர்களிடமிருந்து தப்பிக்க காட்டுபகுதியில் பதுங்கிய வேயன்னா மற்றும் அவரின் கூட்டத்தை சுற்றி வளைத்து பிடிக்க போராடுகிறது போலிஸ். தப்பிக்க முயற்றபோது போலிஸ் சிலரை சுட்டு கொள்ளுகின்றன. மீதமுள்ள கூட்டம் தப்பிக்கமுடியாமல்  போலிஸால் சுடபட்டு சம்பங்கி நதியில் இறந்துகிடக்கின்றன. இந்த கூட்டதில் மயக்க நிலையில் இருந்த சிலரை  வில்லுத்துரை என்ற சிறுவன் தனது ஊர் மக்கள் மூலம் காப்பாற்றுகிறான்.இவர்கள் யார் எதற்க்காக சுடபட்டார்கள் என்ற வினாவுடன் கதை நகர்கிறது.

கொம்பூதி என்னும் கிராமத்தில் கள்ளர் கூட்டத்தை சேர்த்த மக்கள் வாழ்த்து வருகிறார்கள் இவர்களின் தலைவனாக வேலுசாமி எனப்படும் வேயன்னா இவர்களை வழிநடத்துகிறார். வேயன்னா  சொல்வதே இவர்களின் வேதவாக்கு. இவரின் தாயார் கூழானி கிளவி, இவருக்கு வெள்ளையம்மா என்ற தங்கையும் வில்லாயுதம், அன்னமயில் என இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றன.

கொம்பூதி மக்கள் திருடுதல், கொள்ளையடித்தல்  போன்ற தொழில் மூலம் தங்களின் வாழ்க்கையை நடத்திவருகிறார்கள். இதற்கு வேயன்னா உறுதினையாக இருந்து வழிநடத்துகிறார்.இரவில் கொள்ளையடித்துவிட்டு பகலில் சந்தோஷமாக அமைதியாக இருப்பதுதான் இவர்களின் வழக்கம்.

இவர்கள் எந்த வீட்டில் கொள்ளையடிக்க வேண்டும் என்பதை வேயன்னாவின் தங்கை பகலில் நோட்டமிட்டு இவர்களுக்கு தெரியபடுத்துவாள்.அதன்படி வேயன்னாவும், அவரது இளவட்டங்களும் சேர்த்து கொள்ளையடிக்க திட்டமிடுவார்கள். கொள்ளையடித்த பொருள் என்னவென்றுகூட பார்க்காமல் அதை பச்சமுத்துவிடம் கொடுத்து அதற்கு பதிலாக உணவு தானியங்களை வாங்கிகொள்வார்கள். இவ்வாறு இவர்களின் வாழ்கை நகர்ந்தது.

 

இவர்களது ஊருக்கு அருகில்  பெரும்பச்சேரி மற்றும் பெருநாழி என்ற இரண்டு கிராமங்கள் உள்ளது.பெரும்பச்சேரியில் உள்ள மக்கள் தாழ்த்தபட்ட இனத்தை சேர்த்தவர்கள் என்பதால் இவர்களை தங்களின் வேலையாட்களாக பயன்படுத்தி கொண்டார்கள்
பெருநாழி மக்கள்.

பெரும்பச்சேரி மக்களுக்கும் வேற எந்த தொழிலும் தெரியாததால் பெருநாழி மக்களின் விலைநிலங்களில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தினர். பெருநாழி மக்களை கொம்பூதி மக்கள் எந்தவித இடைஞ்சலும் செய்வதில்லை அதேபோல் இவர்களும் கொம்பூதி மக்களை சீண்டுவது கிடையாது.

பெரும்பச்சேரிக்கும் பெருநாழிக்கும் இடையில் ஒரு கிணறு உள்ளது.  இந்த கிணறுதான் இவ்விரண்டு கிராமத்துக்கும் குடீநீர் பிரச்சனையை தீர்த்துவைக்கிறது.ஆனால் பெருமச்சேரி மக்கள் தாழ்த்தபட்டவர்கள் என்பதால் இந்த கிணற்றின் அருகில் செல்லகூடாது. கிணற்றிக்கு சுமார் பத்து அடி தொலைவில் இருந்துகொள்ளவேண்டும். அங்கு வரும் பெருநாழி மக்கள் தங்களுக்கு தேவையான தண்ணிரை எடுத்துகொண்டு ஆளுக்கு ஒரு வாளி என்ற கணக்கில் இவர்களின் பாந்திரங்களில் ஊற்றுவார்கள்.

இவ்வாறு ஊற்றிய நீரை கொண்டுதான் இவர்கள் பயன்படுத்தமுடியும். இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் பச்சிளங்குழந்தை கொண்ட ஒரு தாய் தனது  கணவரை தண்ணிர் கொண்டு வரசொல்லி அனுப்புகிறாள். தன்னுடைய மனைவின் அவசரத்திற்காக கிணற்றில் நேரடியாக வாளியை விட்டு தண்ணீரை எடுத்துகொண்டு செல்கிறான் அவளின் கணவன். இதை பார்த்த பெருநாழி மக்கள் அவனை மறுநாள் பிடித்துவைக்கின்றன. வேலைக்கு சென்ற கணவன் இன்னும் வரவில்லையே, என்னாச்சோ தெரியவில்லையே என்ற கவலையுடன்  சென்று நடந்ததை வேயன்னாவிடம் எடுத்து சொல்லி அழுகிறாள்.

 உடனே வேயன்னா அவரது இளவட்ட படையுடன் பெருநாழிக்கு சென்று பார்த்தபோது அவன் உடல் முழுவதும் இனிப்பு பாவினை பூசி மரத்தில் கட்டிவைத்துள்ளனர். அவனது உடம்பினை சுற்றி எறும்புகள் மேய்துகொண்டிருந்தனர். இதைபார்த்து கோபம்கொண்ட வேயன்னா குடிநீர் அனைவருக்கும் சமம் அதில் என்னடா சாதிவேண்டிகிடக்கு இனிமேல் அந்த கிணறு எல்லாருக்கும் சொந்தம் நாளிலிருந்து பெருமச்சேரி ஆளுங்களும் அங்கதான்டா தண்ணி எடுப்பாங்க உங்களால என்ன பண்ணமுடியுமோ பண்ணுங்கடா என கடுச்கோபத்தில் கூறிவிட்டு மரத்தில் இருந்த அவனை அழைத்து சென்றன.

  வேயன்னா கூறியதால்  அடுத்தநாள் காலையில் அனைத்து பெருமச்சேரி மக்களும்  இனிமேல் நமக்கு தண்ணிர் பிரச்சனை இல்ல என்ற சந்தோஷத்தில் அந்தகிணற்றை நோக்கி ஓடினார்கள். வேயன்னாவும் இவர்களுக்கு பின்னால் நடந்துவந்து கொண்டிருந்தார். கிணற்றின் அருகில் வந்த பெருமச்சேரி மக்கள்  சந்தோஷத்தில் கிணற்றின் உள்ளே எட்டிபார்த்தனர். எட்டிபார்த்த அனைவரின் முகமும் அருவருப்போடு சங்கடமடைந்தனர். இதை தொலைவில் வருந்துகொண்டிருந்த வேயன்னா பார்த்துவிட்டு என்னாச்சி என்று விறுவிறுப்பாக வந்து கிணற்றினை பார்த்தார்.

கிணறு முழுவதும் மலம் நிரம்பியிருந்தது. பெரும்பச்சேரியை சேர்ந்த தாழ்த்தபட்டவர்கள்  இக்கிடற்றினை பயன்படுத்துவதா என பெருநாழி மக்கள் அவ்வாறு செய்துள்ளனர். பெருங்கோபமடைந்த வேயன்னா தலைகுனிந்தபடி அமைதியாக திரும்பி வந்தார்.
இதற்கு காரணமான பெருநாழி மக்களை பழிவாங்காமல் விடமாட்டோம் என பெரும்பச்சேரி மக்கள் அனைவரும் பெருநாழிக்கு வேலைக்கு போவதை நிறுத்தினர். இதனால் இவ்விரண்டு ஊர்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கபட்டது. இப்படியே நாட்கள் பல  கடந்தனர்.

Kutra Parambarai by Vela Ramamoorthy Book Review 

சில மாதங்களுக்கு பின் பெருநாழியில் போலிஸ் ஸ்டேசன் வரபோகிறது அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என வெள்ளைகார அரசு பெருநாழி மக்களிடம் வேண்டுகோள் விடுந்தது. அவர்களும் அதற்கு உதவும் விதமாக அவ்வூரில் இருந்த பழைய பங்களா ஒன்றை சுத்தம்செய்து கொடுத்துனர். அங்கு வந்த விக்டர் போலிஸ் அதிகாரி  வந்த முதல் நாள் அதுவுமாக இங்கு யாரு வேயன்னா என்றான்.

 அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ஒரு போலிஸ் பெரியவர் மட்டும் முன்வந்து அவரை பற்றி எடுத்துசொன்னார். இத கேட்ட விக்டர் உடனே வேயன்னாவை இங்கு வர சொல்லு அவனிடம் நான் பேசனும் என்றான்.  வேயன்னாவை அழைத்து வர அந்த பெரியவரும் இன்னொருத்தரும் கொம்பூதிக்கு சென்றன. வேயன்னா இல்லாததால் அவருடைய அம்மா கூழானி தாய்யிடம் நம்ம வேயன்னாக்கிட்ட எங்க அதிகாரி பேச ஆசபடுறாரு அதனால நம்ம  அய்யாவை கொஞ்சம் அங்க வரசொல்லுங்க என்று பதட்டத்துடன் முனங்கினார்கள்.

அதற்கு கூழானி தாய் என் மகன் அங்கெல்லாம் வரமாட்டான் தேவனா  உங்க ஆபிசர இங்கு வர சொல் என அதிட்டினாள். இந்த ஒரு முற மட்டும் அய்யா வந்தா போதும் என்றார்கள். சரி போங்க அனுப்புறேன். வேயன்னாவிடம் சென்று அய்யா பெருநாழியில எதோ புதுசா போலிஸ் கச்சேரி ஆரம்பிச்சகருங்காங்களாம் அந்த அதிகாரி உன்ன பாத்து பேச வரசொல்லுரான் கொஞ்சம் போலிஸ் கச்சேரி வரைக்கும் போய்ட்டுவந்துரு என்று மனுமுனுத்தாள்.

சரியென்று போலிஸ் கச்சேரிக்கு சென்றார் வேயன்னா. விக்டர் இனிமேல் இந்த வேலயை உங்க ஊர் மக்கள் யாரும் செய்யகூடாது அதமீறி செஞ்சா உங்கள சுட்டுகொல்லவேண்டியதிற்கும் என்று மிரட்டினான் இதை கேட்டுவிட்டு வேயன்னா என்ன செய்தார். இதற்கு மேல் என்னா நடந்தது...

 கொம்பூதி மக்கள் மற்றும் வேயன்னா என்ன ஆனார்கள். வேயன்னாவின் முதல் மகன் வேலு என்ன ஆனான். இதை தவிர்த்து வில்லாயுதத்தின் காட்டில் முளைத்த காதல். வையத்துரை கிளைகதை, வீரண்ணாவின் கதை அதற்கு பின்னால் என்ன நடந்தது  என படிக்க படிக்க மேலும் விருவிருப்பை எற்படுத்துகிறது. இப்புத்தகத்தை கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை வாசித்து கடந்த காலத்தில் நடந்த சாதி அடக்குமுறையினை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.....


No comments:

Post a Comment