Friday, 12 June 2020

நான் யார் பக்கம் (தொடர்-1) - நெடுந்தொடர்

                             
                                   நான் யார் பக்கம் -- ஜெய்முருகன்

நான் யார் பக்கம்  என்ற நெடுந்தொடரை எனக்கு தெரிந்த விதத்தில் என்னுடைய கற்பனைக்கு எட்டிய தொலைவில் நான் பார்த்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சில சுவாரசியமான கற்பனைகளை கலந்து எழுதிவருகிறேன்.இந்த கதையானது அம்மா, மகன், மனைவி உறவுமுறையை அடிநாதமாக கொண்டு எழுதபடுகிறது. இக்கதையை படிக்ககூடிய நீங்கள் கதையின் போக்கு மற்றும் முடிவை பற்றி எதாவது கூற விரும்பினால் தாராளமாக என்னை தொடர்பு கொள்ளலாம்.. நன்றி

    தொடர்...1

                தனக்கான வருங்கால மனைவியை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் அவசர அவசரமாக அலுவலக வேலையை முடித்துவிட்டு இரண்டு நாள் லீவு கேட்பதற்காக முதலாளி அரையை நோக்கி சென்றான் குட்டி.

 குட்டி பார்ப்பதற்கு குட்டி படத்தில் வரும தனுஷ் போன்றே உடல் அமைப்பு கொண்ட இருவத்து ஐந்து வயது இளைஞன். இவனுக்கு ஒரு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனது அம்மாவை சில மாதங்களாக தூக்கவிடவில்லை.

 அதற்கான பலன் தற்போது கிடைந்துவிட்டதால் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பி வாடா என்று அவனது அம்மா விடியகாலையில் சொன்னது அவனுக்கும் மிகபெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

அம்மாவின் செல்ல பிள்ளையான இவன் அம்மாவின் பேச்சை ஒருபோதும் மீறியதில்லை. ஒரு வருடத்திற்கு முன்பே அம்மா தன்னுடைய ஆசையை தெரிவித்தபோது முடியாது என்று மறுப்பு தெரிவித்திருந்தேன்.

அனால்  இனிமேல் அம்மாவின் பொருமையை சோதிப்பது நல்லதில்லை அது அம்மாவை அவமதிப்பது போன்றதாகிவிடும் என மனதிற்க்குள் ஒரு ஓசை கேட்பதை  குட்டி உணர்ந்தான்.

இவனுக்கும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் தனக்கு வரும் மனைவி தன்னுடைய அம்மாவிடம் முறையாக அனுசரித்து இருப்பாளா என்ற பயத்தில் முடித்தளவு கல்யாணத்தை தள்ளிவைத்தான்.

 ஆனால் தற்போது பார்க்கபோகும் பெண் தன்னுடைய நெருங்கிய சொத்தகார பெண் என்றும் அவள் அம்மாவிடம்  ஏற்கெனவே பல முறை நெருங்கி பழகியிருக்கிறாள் என்று கேள்விபட்டதும் அவன் மனம் சற்று நிம்மதி அடைந்தது.

 ஆனால் அந்த பெண்ணை இவன் ஒரு முறை கூட பார்க்கவில்லை என்பதுதான் அவனின் இந்த அவசரத்திற்கு காரணமாக உள்ளது. ஏனென்றால் இவன் சென்னைக்கு வேலைக்கு வந்து சுமார் 3 வருடங்கள் ஆகின்றன.

அடிகடி ஊருக்கு செல்லும் பழக்கம் இவனுக்கு  இருந்தாலும் எந்தவொரு விஷேசங்களிலும் இவன் கலந்துகொண்டதில்லை. அதனால் அதிகமான உறவினர்களை தெரிந்துகொள்ள இவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அந்தபெண்ணை இவன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.


நான் யார் பக்கம் நெடுந்தொடர் ஜெய்முருகன்
நான் யார் பக்கம்


        அந்த பொண்னோ தற்போது படிப்பை முடிக்கும் நிலையில் இருப்பதால் அவளது வீட்டிலும் அவளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள் என்பதை அம்மா எப்படியோ கண்டுபிடித்து கல்யாணத்திற்கான சம்மதத்தை வாங்கிவிட்டார்கள்...

READ MORE ; நான் யார் பக்கம் (தொடர்-2) Click Here

இனிமேல் அம்மா நான் என்ன சொன்னாலும் கேட்கபோறதில்லை. சரி நடப்பது நல்லபடியாக நடக்கட்டும் என்று முனுமுனுத்தபடியே முதலாளி அலுவலக கதவை திறத்தான்.

வா குட்டி என்ன வேல செய்யவேண்டிய நேரத்தில் இங்கு வந்திருக்க என்ன விசியம் சொல்லு என்றார். முதலாளிக்கும் இவன்மீது ஒரு தனிபட்ட முறையில் பாசமுண்டு. வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இதுவரைக்கும் எந்தவித கெட்டபழக்கமும் இல்லாமல் ஒழுக்கமாக இருப்பது இவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

 முதலாளி அதுவந்து அட என்ன தயக்கம் சொல்லுடா என்று செல்லமாக அதட்டினார். நாளைக்கு எனக்கு பொண்ணு பார்க்க போறதால அம்மா என்ன ஊருக்கு  உடனடியாக  கிளம்பி வர சொன்னாங்க என மெல்லிய குரலில் பேசினான்.

 அட இந்த நல்ல விசியத்தை ஏன் இப்படி மென்னு முழுங்குற எப்ப ஊருக்கு கிளம்புற என்றார். அய்யா  இப்ப புறப்பட்டாதான் விடிய விடிய ஊர் போய்  சேரமுடியும். சரி கிளம்பு வரும்போது நல்ல தகவலோடு வா என்றார், கிளம்பியவனை பார்த்து பணம் எதாவது வேண்டுமா என்று கேட்டார்.

இல்ல வேண்டாம் அய்யா  போதுமான அளவு இருக்கு. சரி கிளம்பு... அய்யா வரங்க... ம்ம் பார்த்து போய்ட்டு வா...

     
                                                                                                 தொடரும்.....2

READ MORE ; நான் யார் பக்கம் (தொடர்-2) Click Here 


2 comments:

 1. Good content. Well information. Thanks for sharing. It will be kind enough if you can also see my page and help each other to grow
  My link is https://bomsomguys.blogspot.com/2020/06/vegetarian-diet-plan-for-weight-loss.html
  Thanks a lot for your kind support
  Best Regards
  BOMSOMGUYS.BLOGSPOT.COM

  ReplyDelete