Saturday, 6 June 2020

மகாபாரதத்தில் துரியோதனன் மற்றும் கர்ணனின் நட்பு பற்றி சில உதாரணம்


துரியோதனன் மற்றும் கர்ணனின் நெருக்கமான நட்பை இரண்டு இடங்களில் புரிந்து கொள்ளலாம். 
அதற்கு உதாரணமாக அமைந்த இரண்டு சம்பவங்கள்.

1.துரியோதனனின் குடும்பத்து பெண்களுடன் பழகும் கர்ணன்.
2.கர்ணனின் சாவு.


 முதல் உதாரணம்

       துரியோதனனின் மனைவிக்கும் கர்ணனுக்கும் இருந்த தோழமையை துரியோதனன் நம்பி தனது வீட்டு பெண்களுடன் கர்ணனை பழக அனுமதித்தான். ஒரு முறை கர்ணன் துரியோதனனின் மனைவியுடன் தாயம் விளையாடிக்கொண்டிருந்தான் அப்போது துரியோதனனின் மனைவி தோற்றுப்போனதால் ஆட்டத்தை களைத்துவிட்டு எழுந்து ஓட முயன்றால்.

அப்போது கர்ணன் அவளை பிடித்து இழுக்க முயன்ற போது அவளின் முத்தாரம் அறுந்து விழுந்தது. அந்தநேரம் பார்த்து திடீரென உள்ளே நுழைந்தான் துரியோதனன்.  துரியோதனனை பார்த்ததும் இருவரும் பயத்தில் நடுங்கினர். பானுமதியின் முகத்தில் ஒரு விதமான பதற்றம் நிலவியது. அடுத்தது என்ன நிகழுமோ என்று பானுமதியும் கர்ணனும் அஞ்சிக் கொண்டிருந்த வேளையில் துரியோதனன் கர்ணனை பார்த்து அறுந்த முத்தாரத்தை  எடுக்கவா அல்லது கோர்க்கவா என்றான்.

அறுந்து விழுந்த மணி முத்தை நீ எடுக்க நான் கோக்கவாஅல்லது நான் எடுக்க நீ கோர்க்கிறாய என்றான். துரியோதனன் அவ்வாறு கேட்டதும் இரண்டு பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைந்து நின்றனர். அவ்வாறு துரியோதனன் கூறியதில்  மறைந்துள்ள அர்த்தம்  என்னவென்றால்...சிதறிய முத்துக்களை எடுக்க பொறுமை வேண்டும். கோபம் கொண்ட மனதில் பொறுமை இருக்காது. எடுக்கும் போது முத்து வழுக்கும் அதனால் கோபம் அதிகமாகும். கோபத்தை  அடக்கி பொறுமையாக எடுத்தாலும் அதை மணியில் பின்ன மனதில் சற்றேனும் சலனம் உண்டாகும் சலனமடைந்த மனதால் அந்த நுண்ணிய செயலை செய்ய இயலாது நண்பா என்றான் துரியோதனன்.

கர்ணன் அருகில் சென்ற துரியோதனன் உன்னை நான் ஒருபொழுதும் சந்தேகப்பட மாட்டேன் ஏனென்றால் நீ என் நண்பன் என்றான்.என் உயிருக்கும் மேலானவன் நீ என்றான். உன்னிடம் நான் கொண்ட நட்பு கடவுளுடன் கொண்ட பக்திக்கு இணையாக கருதுபவன் நான் என்று கூறினான். கர்ணனுடைய ஒழுக்கத்தின் மீது அவனுக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படவில்லை. கர்ணனே வியப்படையும் அளவுக்கு துரியோதனன் நடந்து கொண்டான். அது தான்  கர்ணன் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கை. 

READ MORE  : The Alchemist By Paulo Coelho Book Review in Tamil  Click Here

இரண்டாவது உதாரணம்

        துரியோதனனுடன் போருக்கு சென்றால் சாவு நிச்சயம் என்பது தெரிந்தும் கர்ணன் தொடர்ந்து துரியோதனனுடனே இருந்தான். போரில்  மரணம் நிச்சயம் உண்டு மரணத்திற்கு பிறகு சொர்க்கமும்  கிடையாது என்பதை அறிந்த பலரும் யுத்தத்திற்கு முன்பே துரியோதனனை விட்டு வெளியேறினார்கள், சிலர் போர் செய்யாமல் வில்லை முறித்து போட்டுவிட்டு ஒதுங்கினார்கள் ஆனால் கர்ணன் மட்டுமே கடைசி வரை அவனுடன் இருந்தான்.

இத்தனைக்கும் கர்ணனின் தாய் குந்தி தேவி உட்பட பலரும் கர்ணனிடம் துரியோதனனை விட்டு விலக வேண்டும் அவன் கெட்டவன் என கூறினார்கள்  இருந்தால் சாவு நிச்சயம் என்று சொல்லியும் துரியோதனனை விட்டு கர்ணன் விலகவில்லை.போரில் எதிர்த்து போரிடுவது சொந்தம் என்று தெரிந்தும் கூட நண்பனுக்காக போர் புரிந்தான் கர்ணன். அவ்வகையில் நட்புக்கு சிறந்த உதாரணமாக கர்ணனும் திகழ்கிறான்.  

எனவே தான்  மகாபாரதத்தில் துரியோதனன் கர்ணன் நட்பு மற்றவர்களின் நட்பை விட சிறந்ததாக பார்க்கபடுகிறது.


No comments:

Post a comment