Tuesday, 30 June 2020

நான் யார் பக்கம் (தொடர்-3) - நெடுந்தொடர்


                                     நான் யார் பக்கம் - ஜெய்முருகன்

தொடர்-3
  
        குட்டியுடன் ஏழு பேரும் பெண்ணின் வீட்டை வந்தடைந்தார்கள். அவர்களை பார்த்ததும் பெண் வீட்டார்கள், வாங்க.. வாங்க.. என்று  இன்முகத்துடன் அவர்களை வீட்டின் உள்ளே அழைத்தார்கள். உள்ளே வந்தவர்களை, அவர்களுக்காக அலங்கரிக்கபட்ட  நாற்காலியில் அமரவைந்தார் பெண்ணின் அப்பா(ராஜா). இருவீட்டாரின் முகங்களும் சந்தோஷத்தில் மலர்த்திருந்தது.

 
READ MORE ; நான் யார் பக்கம் (தொடர்-1) CLICK HERE

சொன்னபடி, நேரத்திலே வந்திடிங்க, ரொம்ப சந்தோஷம் என்று சிரிந்தார். குட்டியின் அம்மாவை பார்த்து, உங்கள நான், நம்ம சொந்தகாரங்க விஷேசத்தில  நிறைய முறை பாத்திருக்கேன்.. ஆனா பேசனதில்ல, இப்பதான் தெரிஞ்சது நீங்க இவரோட தங்கச்சினு.. 'ஐயாவுக்கு எனக்கும்' அதிக பேச்சுவார்த்த இல்லனாலும், இவருடைய குணத்தபற்றி நம்மாளுங்க அடிகடி பேசியிருப்பத பாத்திருக்கேன்.,

நாங்க உங்க குடும்பத்துல சம்மதம் செய்றது ரொம்ப சந்தோஷம் என்று.. தன் பேச்சில் அனைவரையும் சமநிலைபடுத்தினார். இவர்கள் இவ்வாறு மாறி,மாறி., பேசிகொண்டிருக்க குட்டியின் கண்கள் அங்கும், இங்கும் என அழைபாய்ந்தது. வீட்டை சுற்றி பார்த்த படியே, சுவர்களில் அவளது படங்கள் எதாவது இருக்கிறதா.!என்று நோட்டமிடுகிறான்.

கீழே பாயில் அமர்ந்திருந்த அவனது நண்பர்கள் குட்டியை பார்ந்து.. என்னடா மாப்புள, இவங்க பொண்ண இப்ப காட்டுவாங்களா இல்ல இப்படியே பேசி,பேசி.. பொழுத கழிச்சிட்டு.! கடைசியில .! நல்ல நேரம் முடியபோகுது முதல்ல தட்ட மாத்திடலாம், மத்த சம்ரதாயத்த அப்புறம் பாத்துப்போம்.. அப்படினு சொல்லிடுவாங்களா.. என்று குட்டியை பயமுறுத்தினார்கள்.

இதை கேட்டவன் கொஞ்சநேரம் அமைதியா.! இருங்கடா.. என்று சிரிந்தபடியே பதிலளித்தான். இதையெல்லாம் கண்காணித்த  பெண்ணின் பாட்டி (ராஜாவின் அம்மா) குட்டியை பார்த்து, என் பேத்தியை கட்டிக்க போறவன் நீதானா., நீ ரொம்ப கொடுத்துவச்சவன் அவ, அழகுக்கு, உசுரத்துக்கு ஏத்தமாதிரியே மாப்ள கிடைச்சுட்டான். என் போத்தி அதிஷ்டகாரி என சந்தோஷத்தில் புலம்பினாள்.

இவர்களின் பேச்சையெல்லாம் கேட்டுகொண்டிருந்த ஊர் பெரியவர்கள்,  பொண்ண வரசொன்னா.. பாத்திட்டு மத்த விசியத்த பேசிடலாம் என்றார்கள். இப்பதான் குட்டிக்கு  உடம்புல கொஞ்சமா தெம்பு வந்தது,, அந்த பெரியவர்கள பார்த்து 'உங்கள கூட்டிட்டு வந்தத நினைச்சு நான் ரொம்ப பெருமபடுறேன்' என்று மனதுக்குள் சந்தோஷபட்டான்.

கூட்டிட்டு வாங்கிடி என் " பேத்திய (ரோஜா)" என்று அங்கிருந்த இளசுகளிடம் சத்தமிட்டாள் கிளவி. ராஜாவும் குட்டியோட அம்மா, மாமாவை பார்த்து அனுமதி வாங்கிட்டு, அவனது மனைவி பக்கம் திரும்பி கண் அசைத்தான். அதன்பின் சிறிது நேரம் கழித்து பெண்ணின் அம்மா., அவளை பிடித்தபடி மெதுவாக வெளியே அழைத்து வந்தாள்...

ரோஜா வெளியே வந்ததும் அனைவருக்கும், டீ கொடுத்துவிட்டு அருகில் இருந்த அம்மாவிடம் சென்று., நின்றுகொண்டாள்.

READ MORE ; நான் யார் பக்கம் (தொடர்-2) CLICK HERE

ரோஜாவை பார்த்ததும் அனைவருக்கும் ஒருமனதாக பிடித்துவிட்டது. குட்டிக்கும் பிடித்துபோக அவன் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பட படவென பறந்தன. அதை முகத்தில் காட்டிகொள்ளாமல் அமைதியாக இருந்தான்.

 மனத்திற்குள் அவன் வரைந்த  ஓவியத்தை விட இவள் இருமடங்கு அழகாக இருப்பதை கண்டு அவனின் மனம் பறந்தது. அவளின் கண்கள், மூக்கு, கூத்தல், உயரம் என அனைத்தும் குட்டியின் கண்களை பறிக்க "உன்னை பார்த்த பின்புநான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே" என மனதிற்குள் முனுமுனுக்கிறான்.

நம்ம சைடு ஓகே..  அவளுக்கு என்ன "பிடிக்குதா, இல்லையானு தெரியலியே" எப்படி தெரிஞ்சிக்கிறது என்று யோசித்தான். அப்போது குட்டியின் அம்மா.. எங்களுக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு.. உங்களுடைய விருப்பம் என்னானு சொன்னா நல்லாயிருக்கும் என பெண் வீட்டாரை பார்த்து கேட்டாள்.

குட்டியின் மனமோ படபடவென்று துடித்தது. ரோஜாவின் அப்பாவோ எங்களுக்கு எந்தவித குழப்பமும் இல்ல, முழு சம்மதம்  என்று அவர்களின் விருப்பத்தை தெரிவித்தார். மத்தபடி ஜாதகத்தை பார்த்திட்டு அடுத்து என்னானு பாக்கவேண்டியது தான் என்றார். அதற்கு குட்டியின் மாமா நாங்க ஜாதகத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்ல., ரெண்டு பேருக்கு புடிச்சா சரி... அதுவே மிகபெரிய பொருத்தம்தான், அதுக்கு மேல., எல்லாம் அவன் கையில என்றபடியை குட்டியை பார்த்து, நீ என்னடா சொல்ற உனக்கு விருப்பம் தானே என்று கேட்டார்.

குட்டியை பேசவிடாமல் அவனுடைய அம்மா,, அவன என்ன? கேக்கிறது எல்லா "சம்மதம்தான்" என்று பேச்சை முடித்தாள். இவ்வாறு அனைவரும் மாத்தி, மாத்தி பேசிகொண்டிருக்கையில்..ரோஜா, குட்டியை ஓர கண்ணால் பார்த்தபடி தலைதிரும்பி நின்றவள். தன்னுடைய பாட்டியின் கையை சொரண்டினாள், பேத்தியின் எண்ணத்தை புரிந்துகொண்ட பாட்டி..

குட்டியை பார்த்து என் பேத்திகிட்ட ஏதாவது பேசரதா இருந்தா,, பேசு ராசா என்றாள். இதை கேட்டதும் உடனே நாற்காலிய விட்டு எழ அசைந்தான். இதை பார்த்து அவனின் அம்மா "எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம்" பேசிகிட்டும் என்று இடைமறிந்தாள். அவனுடைய மாமாவோ, பேசுட்டும் விடுனு அவனை அனுப்பினார், குட்டியும் சந்தோஷமாக கிளம்ப,, மச்சி "கெத்தா பேசிட்டுவாடா" என்று அனுப்பினார்கள் அவனின் நண்பர்கள்.


 குட்டி, ரோஜா இருவரும் வீட்டிற்கு பின்புறம் இருந்த கொய்யா செடிக்கு அருகில் ஒருவருக்கொருவர் பார்த்தும் பாக்காதவாறு.. நின்றுகொண்டு, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒவ்வொரு கொய்யா இலையாக பறித்துபோட்டார்கள். அவளின் தலையில் வைத்திருத்த பூவின் வாசத்தால் குட்டியின் மனம் தடுமாற அவனின் கால்கள் லேசாக நடுங்க ஆரம்பித்தது.

இதை பார்த்த ரோஜா, குட்டியை பார்த்து உங்களுக்கு டீ பிடிக்காதா.! என்று கேட்டாள்.? எனக்கு டீ பிடிக்கும் ஏன் கேக்கிறங்க.! இல்ல... நான் உங்களுக்கு கொடுத்த டீ யை நீங்கள் குடிக்கவே இல்லயே! அதான் கேட்டேன். அது வந்து... என்று அவன் மெல்ல பேசிவிட்டு அவளின் முடிவை தெரிந்துகொள்ள வாய திறப்பதற்குள்.. ரோஜாவே முன்வந்து எனக்கு உன்ன புடிசிருக்கானு கேட்கபோறிங்க.. அத்தான என்று கேட்டாள்... ம்ம்ம் என்று அவனும் தலையாட்டினான். அதற்கு ரோஜாவும் எனக்கு புடிச்சிருக்கு..

சரி உங்களுக்கு என்று குட்டியை பார்த்து கேட்டாள்.. எனக்கும் புடிச்சிருக்கு என்று இவனும் மெதுவாக பதிலளித்தான். இவனுக்கு ஒரே ஆச்சிரியம் கலந்த சந்தோஷம். அடுத்த கேள்வி கேட்பதற்குள், ரோஜா இடைமறிந்து, இதுக்கு முன்னாடி நீங்க என்ன? எங்காவது பார்த்திருக்கிங்களா.! என்று கேட்க., இல்ல ஏன்?  என்று ஆச்சரியமாக! கேட்டான்...

அதுக்கு அவளோ, ஆனா நான் உங்கள நாலு முறை பார்த்திருக்கிறேன்! என்றாள்.  இவனுக்கு அதிர்ச்சி! மேல அதிர்ச்சி ! எங்க, எங்க.. என்று வேகமாக கேட்டான். நேரம் வருபோது சொல்றேன்.. என்று ரோஜா அமைதியானாள். இவனோ அட ச்ச.. இப்படி ஒரு அழகான பொண்ண இத்தன நாளா  நாம பாக்காம., இருந்துட்டோமேடா மடையா.! என்று தன்னை தானே திட்டிகொண்டு, கையில் இருந்த கொய்யா இலையை தூக்கி எறிந்தான்.READ MORE ; நான் யார் பக்கம் (தொடர்-1) CLICK HERE

அவனின் இந்த செயலை இரசித்தபடியே உள்ளுக்குள் சிரிந்துகொண்டாள்  ரோஜா.. உண்மையிலே என்ன புடிச்சிருக்கா ? என்று மறுபடியும் கேட்க! புடிக்கலனு சொன்னா, என்ன பன்னுவிங்க என்று கோவபட்டால்.,  இல்ல, சும்மா மறுபடியும் ஒருமுற கன்பாம் பண்ணிக்கத்தான்... என்று மெலிந்தான்...

உங்கள  புடிக்கலனா எதுக்கு நான்..எனக்கு கல்யாணம் பன்ன.,  வீட்டில மாப்ள பாக்குறாங்க.?என்ற விசியத்த, எங்க பாட்டி மூலமா உங்க அம்மா காதுல போட்டு உங்கள எதுக்கு இங்க  வரவக்கபோறேன் என்றாள். இவனோ ஒன்னும் புரியாம வாயடிச்சுபோய் நிக்கிறான்.. அப்போ நாம இவள பாக்க வரல.! நம்மல தான் இவ பாக்க வரவச்சிருக்கா... என்று திகைந்து நின்றான். ஒன்னும் புரியல கொஞ்ச விளக்கமா சொல்லுங்க என மறுபடியும் கேட்க.,  அதற்குள் அவனுடைய அம்மாவிடமிருந்து நேரமாச்சி வாடா.. என்று குரல் வந்தது.

இவனக்கோ எந்த கேள்விக்கு விடை தெரியாமல்,! ஒரே குழப்பத்துடன் கைய பிசித்தவாறு.. இதோ வந்துட்டேன் என்றான். என்னங்க என்னதாங்க சொல்ரிங்க.. கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க ப்ளீஸ் என்றான்...எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் இப்ப வாங்க.. "அத்த கூப்றாங்க" போலாம் என்று உள்ளே வந்தாள்..

 "என்னங்க ,என்னங்க" என்று அவள் பின்னாடியே உள்ளே வந்தவன் அனைவரையும் பார்த்ததும் அமைதியானான். என்னடா பேசிட்டியா..  புடிச்சிருக்கா என்று அம்மா அதிகாரமாக கேட்க. இவன் அமைதியாக.. ம்ம்ம் என்று தலை அசைத்தான்.. இரு குடும்பத்தினரும் பேசிவிட்டு.. சரிங்க ஆக வேண்டியத பார்ப்போம். நான் அய்யிர பார்த்துட்டு "என்னா, ஏதேனு" உங்களுக்கு தகவல் தரேன்.. என்று விடை கொடுத்தார் குட்டியின் மாமா.

 சரிங்க நானும் நம்ம ஊர் அய்யிருக்கிட்ட விசாரிக்கிறேன், என்று சென்றவர்களுக்கு கை வணங்கினார். அனைவரும் சந்தோஷாமாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். ரோஜா அவளுடைய அறையில் இருந்து குட்டியின் அசைவினை ஒவ்வொன்றாக நோட் செய்துகொண்டிருந்தாள். குட்டியோ எங்க அவள காணும்.? என்று புலம்பியபடி தேடினான். ஒருவேள இப்படிதான் நம்ம கண்ணுக்கு தெரியாம, நம்பள நாலு முறை பார்த்திருப்பாளோ.. என்று முனுமுனுத்தபடியே செப்பலை மாட்டினான்.

 அப்படியே சிறிது இடபக்கம் திரும்பியவன் அங்கே ஒரு ஜன்னல் வழியாக ரோஜா  இவனை பார்த்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தான். இவன் பார்த்த உடனே சற்று ஜன்னலை சாற்றியவாரு இவனுக்கு கை அசைத்தாள். இவனும் தலை கோதியவாறு அவளுக்கு கை அசைத்தான்.. இருவரும் சிரிந்தபடியே கையசைத்து விடைபெற்றன.

READ MORE;  The Seven Habits of Highly effective people Book Review In Tamil CLICK HERE

இதனை பார்த்த  அவனுடைய நண்பர்கள் அங்கிருந்து சிறிது தூரம் சென்றவுடன் என்னா.. மச்சி கெத்து காட்டிடியா என்று கேட்க...யார் நானு கெத்து.. அட இவங்க வேற! நடந்து என்னனு தெரியாம? என மனசுகுள் முனங்கியபடியே...அதை வெளியில காட்டிக்காம.. எப்படி மச்சி..இது போதுமா இல்ல இன்னும் வேனுமா...என்று பேசி  சிரித்துவிட்டு..

மெதுவாக அவள் பேசியதை ஒவ்வொன்றாக யோசித்தபடியே நடந்து சென்றான்....

                                                                                               தொடர்....4

No comments:

Post a Comment