Saturday, 20 June 2020

நான் யார் பக்கம் (தொடர்-2) - நெடுந்தொடர்

                       
                   நான் யார் பக்கம் (தொடர்-2)  - நெடுந்தொடர் 

லீவு கிடைந்த சந்தோஷத்தில் எதை எடுப்பது, எதை விடுவது என்று புரியாமல் கையில் கிடைந்த பொருட்கள் மற்றும் துணிகளை மட்டும் பேகில் போட்டு கொண்டு அவசர அவசரமாக பஸ் ஸ்டாண்டுக்கு சென்றான்.

அவனுடைய நேரம்'  எந்த பேருந்திலும் அவனுக்கு சீட்டு கிடைக்கவில்லை. ஒரே கூட்டநெரிசலாக இருந்தது, என்ன செய்வது என்று யோசித்தபடியே அருகில் இருந்த டீ கடையை நோக்கி மெதுவாக நடந்தான். 


READ MORE : நான் யார் பக்கம் (தொடர்-1) Click Here

அப்போது அவனுடைய போன் சினுங்கியது, யாராக இருக்கும் என்று போனை எடுத்து பார்த்தவன், அவனுடைய மாமா என்று தெரிந்ததும் சற்று உடல்மொழியை மாற்றிகொண்டு சொல்லுங்க மாமா என்றான்.

எங்கடா இருக்க' என்று ஒரு கம்பீரமான குரலில் அவனுடைய மாமா கேட்க, மாமா பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டேன், இங்க பஸ் எதுவும் கிடைக்கில, கூட்டம்  அதிகமா இருக்கு என்றான். 

சரி சரி பார்த்து வா,  ஆல்ரெடி அம்மா உங்கிட்ட  எல்லா விசியமும் சொல்லியிருப்பா, பொண்ணு வீட்டுல இருந்து போன் பண்ணாங்க  நாளைக்கு காலையில ஒன்பது டூ பத்தரை  வரைக்கு நல்ல நேரம் இருக்கும்தாம். 

அதுக்குள்ள வந்தா பேச வேண்டிய எல்லாம் பேசிடலாமுனு சொன்னாங்க. இதபத்தி நான் அம்மாகிட்ட  பேசிட்டேன் சரி அப்படிதான் போலாமுனு சொல்லிட்டா. நீ கொஞ்சம் நேரத்தில வந்தா நல்லாயிருக்கும் என்றார்.

 சரி மாமா நான் முடிந்தளவு சீக்கிரம் வரேன். சரி ஊருக்கு வந்ததும் எனக்கு தகவல் கொடு, அப்படியினு சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். மாமா அதாவது அம்மாவுடைய அண்ணண். 

இவர் மீது குட்டிக்கு எப்பேதும் ஒரு தனிமரியாதை உண்டு. இவனுக்கு அப்பா இல்லாத குறையை இவர்தான்  தீர்த்துவைக்கிறார்.ஆரம்பகாலங்கலில்  இவனின் படிப்புசெலவு முதல் இவர்களுக்கு  தேவையான அனைத்து உதவியும் இவர்தான் முன் நின்று செய்து கொடுத்தார்.

 குட்டி, அம்மாவுக்கு அடுத்து  அதிக மரியாதை கொண்டது இவர்மீது தான். 
மாமா இவ்வாறு சொன்னதும் குட்டிக்கு ஏற்கனவே இருந்த சந்தோஷம் இப்போது இரட்டிப்பாகி என்ன செய்வது என்று புரியாமல் ஆர்வத்தில் பஸ்ஸை தேடி அங்கும் இங்கும் அலைந்தான்.


நான் யார் பக்கம் (தொடர்-2) - நெடுந்தொடர்


அப்போது அவன் பார்த்த முதல் பஸ்ஸானது அதிக பயணிகளுடன்  மெதுவாக பஸ் ஸ்டான்டினை விட்டு வெளியேறி கொண்டிருந்தது. இதை பார்த்தவன், இந்த பஸ்ஸையும் விட்டா நம்ப பொழப்பு நாரிடும், கிளம்புடா கைபுள்ள என்று முனங்கியபடியே வேகமாக ஓடிவன் அந்த பஸ்ஸின் படியில் ஸ்டைலா ஏறி உள்ளே சென்றான்.

எப்போதும் ஜன்னலோரத்தில் உள்ள சீட்டை விரும்பும் இவனது மனம், இப்போது நின்றபடியே  ஜன்னல் வழியாக வெளியுலகை இரசித்து கொண்டுவந்தது. 

பஸ்ஸில் எத்தனை பெண்கள் இருந்தாலும் இவனுடைய மனமானது, தனக்கான வருங்கால மனைவி எப்படி இருப்பால் என்ற கற்பனையில், அவன் கண்களுக்கு தெரிந்த பெண்களை ஒவ்வொன்றாக பார்த்து இந்த பொண்ணு மாதிரி இருப்பாலா அல்லது அந்த பொண்ணு மாதிரி இருப்பாலா என கற்பனையில் ஒவியம் வரைந்தான். 

இவ்வாறு இவன் கற்பனையில் இருந்தபோது, சில ஊர்களை பஸ் கடந்ததும் அவனுக்கு ஒரு சீட்டு கிடைத்தது. அதில் அமர்ந்துகொண்டு சிறிதுநேரம் உறங்கியவன், விடியகாலை நான்கு மணிக்கு ஊர் வந்ததும் பட்டென விழித்து பஸ்ஸை விட்டு  இறங்கினான்.

அங்கு அவனை அழைத்து செல்ல அவனுடைய நண்பர்கள் மூன்றுபேர் வண்டியில் காத்துகொண்டு இருந்தன.
அவனை பார்த்ததும், வா மச்சி எப்படி இருக்க என மாறி மாறி  விசாரித்து கொண்டார்கள். 

அதன்பின் நான்கு பேரும் வண்டியில் அங்கிருந்து புறப்பட்டன. அதில் ஒருவன் ஏன்டா, ஊருல எந்த விசேஷம் நடந்தாலும் சாரிடா மச்சி லீவு கிடைக்கல  அடுத்தமுறை பார்த்துகலாம் விடுனு சொல்லுவ,  இப்ப என்னடானா காலையில தகவல் கொடுத்தா, நைட்டு ஊருல இருக்க டே... என்று பேசியவனை, குறுக்கே வழிமறைத்த குட்டி அடே கோபாலு... "அது வேற இது வேற" மச்சி ரண்டையும் கம்பேர் பண்ணகூடாது. நாளைக்கு நடக்கவேண்டிய வேலைய மட்டும் பார்ப்போம். நானே என்ன செய்றதுனு  புரியாம இருக்கேன் இதுல நீங்கவேற.  

அட இதுல என்ன மச்சி இருக்கு, போற பொண்ண பாக்குற புடிச்சா ஓகே சொல்லு, இல்லனா விடு அப்புறம் பேசிப்போம், என்று பேசியபடியே குட்டியின் வீட்டிற்க்கு முன் அவர்களின் வண்டி வந்து நின்றது. சரி ஓகேடா....   நான் போய் கொஞ்சநேரம் தூங்குறே நீங்க சரியா எட்டு மணிக்கு இங்கு இருக்கனும் சரியா.... அம்மா வெளியே பார்த்த இவர்கள் ம்ம்... சரி...அம்மா வராங்க அம்மாகிட்ட பேசு நாம காலையில பேசிப்போம் என்று கிளம்பினாராகள். அம்மாவை பார்த்த குட்டி அம்மா என்று வேகமாக நடந்தான். வாடா என் தங்கமே, எப்படிடா இருக்க என்று பாசமாக  அவனை அரவனைத்தாள்.

 நான் "நல்லாதான் இருக்கே'' நீ எப்படி இருக்க, நான் நல்லா இருக்கிறது  இருக்கட்டும் நீ என்னா? வயசு பைய மாதிரியா இருக்க தாடியும், முடியுமா. இப்படியே போனா எந்தபொண்ணுக்குடா உன்னா புடிக்கும் என்று வசைபாடினாள்.

உன் அவசரத்துக்கு ஆளா பரந்தா  இப்படிதான் இருக்கும் என்று அம்மாவிடம் செல்ல சண்டையிட்டான். அதெல்லாம் எனக்கு தெரியாது, ஆறு மணிக்கு கடை திறக்குறானோ இல்லையோ முத ஆளபோய் இதயெல்லாம் வழிச்சிட்டு வர... இதெல்லாம் எங்க அண்ணன் பார்த்தான் உன்ன ஒன்னும் சொல்லமாட்டான் என்னத்தான் கண்டபடி திட்டுவான். 

சரி விடுமா நீ ஏன் பீல் பன்ற..  மாமா வரத்துக்குள்ள எல்லாத்தையும் மாத்திடலாம்... ம்ம்ம் இப்படியே எதாச்சும் பேசு...போ போய் கொஞ்சநேரம் தூங்கு கண்ணெல்லாம் பாரு எப்படி சிவந்திருக்கு. சரி நான் போய் தூங்குறே நீ  கரெட்டா ஆறு மணிக்கு என்ன எழுப்பிவிடு சொல்லியபடியே  குட்டி வீட்டிற்கு உள்ளே நுழைந்தான்.  

அம்மாவோ வாசலுக்கு சாணம் தெளிப்பதற்காக வாசலை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் வீட்டு வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு டே குட்டி எழுடா என்ற சத்தம் சமையல் அறையில் இருந்து ஒழித்தது. அதைகேட்ட குட்டியும் தூக்க கண்களை துடைத்து கொண்டு முடிவெட்ட கட்டிங் கடைக்கு சென்றவன்.

அவனுடைய மாமா பக்கத்து ஊரிலிருந்து  வருவதுக்குள் இருவரும் ரெடியாக இருந்தார்கள். குட்டியின் நண்பர்களும் அவனுடைய வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தடியில் ரெடியாக நின்றுகொண்டு இருந்தார்கள். எட்டு மணி அளவில் குட்டியின் மாமா மற்றும் அவருடைய  நண்பர்கள் இரண்டு பேர் ஊர் பெரியவர்கள் என்ற முறையில் அங்கு வந்தார்கள்.

என்னடா எப்படி இருக்க,  என்று மாமா கேட்க , நல்லாயிருக்கேன் மாமா என மெதுவாக தலையாட்டினான். அதன்பின் அவனுடைய அம்மாவை பார்த்து என்னம்மா கிளம்புலாமா என்றார்...ம்ம் போலாம் என்று சம்மதம் சொல்ல, ஊர் பெரியவர்கள் உட்பட குட்டியுடன் மொத்தம்  ஏழு பேர் பெண் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள்...

                                                                                                தொடரும்......3

3 comments:

  1. Hi I m blogger too. Please check it out too. And leave a comment too.
    https://gourmetva.blogspot.com/2020/06/kabab-aur-nawab-ka-sehar-lucknow.html

    ReplyDelete