நான் யார் பக்கம் - ஜெய்முருகன்
தொடர்-3
குட்டியுடன் ஏழு பேரும் பெண்ணின் வீட்டை வந்தடைந்தார்கள். அவர்களை பார்த்ததும் பெண் வீட்டார்கள், வாங்க.. வாங்க.. என்று இன்முகத்துடன் அவர்களை வீட்டின் உள்ளே அழைத்தார்கள். உள்ளே வந்தவர்களை, அவர்களுக்காக அலங்கரிக்கபட்ட நாற்காலியில் அமரவைந்தார் பெண்ணின் அப்பா(ராஜா). இருவீட்டாரின் முகங்களும் சந்தோஷத்தில் மலர்த்திருந்தது.