Tuesday, 26 May 2020

The Alchemist By Paulo Coelho Book Review


                The Alchemist By Paulo Coelho Book Review in Tamil

புத்தகம்    - தி அல்கெமிஸ்த்  (The Alchemist)
ஆசிரியர்- பாவ்லோ கொய்லோ(1988)  (Paulo Coelho)

இப்புத்தகத்தின் மைய கருத்து...

                                              கனவை பின்தொடர்...


உன்னுடைய பிறவிபலனை அடைய விரும்பினால் உன்னுடைய கனவுகளுக்கு பின்னால் சென்று அதை அடைய முயற்சி செய் என்பதே ஆகும். [ FOLLOWING YOUR DREAM]

கனவை நிறைவேற்றுவது என்பது நமக்கும் நம் இதயத்திற்குமான உரையாடல் என்று கூறுகிறார்.
                                                           


உலகின் அனைத்து நாட்களிலும் அதிக வாசிக்கபட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. இப்புத்தகத்தை வெளியிட்டபோது பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் சில வருடங்களுக்கு பின் அனைவராலும் பாராட்டபட்டு சமநிலை கருத்தை உருவாக்கியது. 

இது கற்பனை கதை என்றாலும் சொல்லிருக்கும் விதமும் அதற்கான கதாபாத்திரமும் இப்புத்தகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது.

கதைகளத்தில் பேசப்படும் மொழி வெவ்வேறாக இருந்தாலும் மனித மொழி ஒன்று தான் என்பதை இப்புத்தகம் உணர்த்துகிறது. 
 இப்புத்தகம் நிறைய வெற்றியாளர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
நம்முடைய வாழ்க்கையில் உண்பதற்கு உணவு மற்றும் தேவையான அளவு பொருள் இருந்தால் போதும் என்று இருப்பதை முற்றிலுமாக மாற்றி உன்னுடைய பாதைய தேர்ந்தெடுத்து அதற்காக உழைத்து வெற்றி பெறு என்பதை வலியுறுத்துகிறது. 

வெற்றிக்கான காரணமாக இப்புத்தகம் நமக்கு கூறுவது. ..

1.இதயம் கூறுவதை நாம் கேட்பது.
2.நமக்கான வாய்ப்புகளை கண்டறிவது.
3,நம் கனவுக்கான சகுனம் எவை என்பதை அறிவது.

கனவு தோல்வி அடைவதற்கான காரணங்கள்...

1.உன்னுடைய கனவை அடைவது மிக கடினம் என பிறர் கூறுவதை       நாம் ஏற்பது.
2.நெருக்கமானவர்களை விட்டு விலகமுடியாமல் தவிர்ப்பது. 
3.தோல்வி ஏற்பட்டால் என்னவாகும் என்ற பயம் 
4.பதட்டத்தில் எடுக்கும் குழப்பமாக முடிவு. 
அன்பு என்பது பிரபஞ்ச ஆன்மாவை முழுமையாக மாற்றுவதாகும்.

          நம்முடைய கனவை அடையமுடியாமல் போனதற்கான         காரணமாக இப்புத்தகம் நமக்கு கூறுவது. 

சிறு வயதில் யாரை கேட்டாலும் இதுதான் என்னுடைய கனவு என்று ஏதோ ஒன்றை கூறுவார்கள். அது அவர்களை பாதித்த துறையாக இருக்கலாம் அல்லது அவர்கள் பெற்றோர்கள் அல்லது அவர்களை சுற்றி உள்ளவர்கள் கொடுத்த ஆலோசனையாக  இருக்கலாம். ஆனால் பின்னாளில் அவர்களால் அதை தொடரமுடியாமல் இதுதான் நம்ம வாழ்க்கை என்று ஏதோ ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்கிறோம். தன்னுடைய தலைவிதியை மாற்றும் திறன் தமக்கு உள்ளது என்பதை மக்கள் உணரவேண்டும். இக்கோட்பாட்டினை இப்புத்தகம் நமக்கு உணர்த்துகிறது.
நம்முடைய பிறவி நோக்கம் என்பது நம்முடைய கனவை நோக்கி சென்று அடைவதாகும். ஆனால் அது காலபோக்கில் சாத்தியம் இல்லை என்று எதிர்மறை சக்தியால் மறைகிறது.நம்முடைய நிலை எதுவாக இருந்தாலும் நம்முடைய எண்ணமும் செயலும் ஒன்று சேர்ந்து  நம் கனவுக்காக முயற்ச்சிக்கும் போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியோடு இணைத்து நம் வெற்றிக்கு உலகிலுள்ள அனைத்து ஆன்மாக்களும் உதவி செய்யும்.

                                     

கதை    ( The Alchemist By Paulo Coelho Book Review in Tamil )

ஸ்பெயின் நாட்டில் அண்டலூசியா என்ற பகுதியில் சான்டியாகோ என்ற ஆடு மேய்க்கும் (இடையன்) இளைஞன் தன் செம்மறி ஆடுகளை அழைத்துகொண்டு பாழடைந்த தேவாலயத்தில் இரவு தங்கினால். ஆடுகள் எதுவும் காணாமல் போய்விடகூடாது என்பதற்காக உடைந்த கதவுகளுக்கு சில கட்டைகளை கொண்டு முட்டுகொடுத்தான். கையில் இருந்த புத்தகத்தை அருகில் வைத்துவிட்டு உறங்க தொடங்கினான். அப்போது அவன் நினைவில் போன வருடம் செம்மறி ஆட்டின் ரோமத்தை வாங்கும் வியாபாரின் மகளிடம் பேசிய தருனத்தை எண்ணிபார்த்தான். இன்னும் சில நாட்களில் அவளை சந்திக்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் உறங்க தொடங்கினான்.
உறங்கிகொண்டு இருத்த போது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அது என்னவென்றால் எகிப்தில் உள்ள பிரமீடுகளில் புதையல் உள்ளது என்று. திடீரென கண்விழித்த சான்டியாகோ இந்த கனவு நமக்கு ஏற்கெனவே சில முறை வந்துள்ளது என்று குழப்பம் அடைந்தான். விடிந்தபின் இதற்கான தீர்வு காண மூதாட்டி ஒருவரை சந்தித்தான். அந்த மூதாட்டி அவன் கையை பிடித்து முனுமுனுத்தபடி (குறவர்களின் பிராத்தனை) அவனிடம் இது ஆன்மாவின் மொழி என்பதால் உன்னால் மட்டுமே உணர முடியும் என்று விளக்கினாள் அந்த மூதாட்டி. இந்த கனவு நிறைவேறுவதற்கான சாத்தியகூறுகள் உருவாகினாள் உன் வாழ்க்கை அழகாக மாறிவிடும் என்றாள் மூதாட்டி.

இதை கேட்டுவிட்டு வெளியே வந்த சான்டியாகோ கடைவீதியில் உணவு உண்ண ஒரு ஓட்டலுக்கு போனான் அப்போது அங்கு வந்த ஒரு பெரியவர் அவனிடமிருந்த புத்தகத்தை படிக்க கேட்டார். அவனும் அப்புத்தகத்தை படிக்க கொடுத்தான்.
சிறிதுநேரம் கழித்து அந்த பெரியவர் சான்டியாகோவிடம் உன் கனவு அடைவதற்கான  வழியை சொல்லுகிறேன் அதற்கு கைமாறாக நீ எனக்கு உன் செம்மறி ஆட்டின் பத்தில் ஒரு பகுதியை எனக்கு கொடுக்க வேண்டும் என்றார். அதற்கு சம்மதம் தெரிவித்த இவனும் கனவுக்கான பாதையை கண்டறிந்தான்.
பின்னர் தான் தெரிந்தது அந்த பெரியவர் அரசன் என்றும் அன்று அவர் மாறுவேடத்தில் வந்தார் என்றும். கனவுக்கான பாதையை கண்டறிந்த பின் பயணத்திற்கு தேவையான பணத்தை எடுத்துகொண்டு எகிப்து பிரமீடுகளை நோக்கி நகர்ந்தார்.

 ஆப்பிரிக்காவே  கடக்கும்போது ஒருவனால் எமாற்றபட்டு சிறிது பணத்தை இழந்தான் அதன்பிறகு ஒரு சிறிய கடையில் வேலை செய்து ஒரளவு பணம் சேர்ந்த பின் எகிப்து பாலைவனத்தை வந்து அடைந்தான் அதன்பின் ஒரு ரசவாதியின் துணையோடு பழங்குடியினர் மற்றும் பல வழிபறி கொள்ளையர்களை கடந்து இறுதியாக புதையல் இருக்கும் பிரமிடு எது என்று கண்டறிந்தான்.
 புதையல் எடுப்பதற்காக அந்த இடத்தை தூர்வாரினான் அப்போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பழங்குடி மக்களின் ஒரு அமைப்பினர் அவனை பார்த்து இங்கு என்ன செய்கிறாய் என்று கேட்க அதற்கு அவன் இங்கு புதையல் இருப்பாதாக கனவு கண்டேன் என பதில் அளிக்க அக்கூட்டத்தில் தளபதி இங்கு அப்படியெல்லாம் ஒன்று கிடையாது கனவு கண்டதற்காக இவ்வளவு தூரம் கடத்துவந்தாய என்று அவனை கேலி செய்து எனக்கும்தான் ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியா பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த தேவாலயத்தில் புதையல் உள்ளதாக கனவு வந்தது நான் அதற்காக அங்கு உன்னைபோல் முட்டாள்தனமாக சென்றுவிட்டேனா என்ன என்று அவனை அடித்து அவனிடமிருந்த தங்கம் மற்றும் பணத்தினை பறித்துகொண்டு அனுப்பினர்.
ஏமாற்றித்தில் மிகுந்து வேதனையோடு நடத்துவந்த சான்டியாகோ இந்த நிலைமையில் எப்படி தன் காதலி முகத்தில் முழிப்பது வருந்தியபடி வந்தான். அப்போது அக்கூட்டத்தில் ஒருவன் கூறியது நினைவுக்கு வந்தது.
உடனே அதை ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போம் என்று அந்த பாழடைந்த தேவாலயத்திற்க்கு சென்று அவன் கூறியதை போலவே ஒரு மரத்தடியில் குழி பறித்தான் அப்போது தட்டு என்று ஒரு சத்தம் வத்தது.அது என்ன சத்தம் என்று அவன் மண்ணை ஒதுக்கிவிட்டு பார்க்கும்போது பெரிய   இரும்பு பெட்டி ஒன்று இருந்தது அதை திறந்து பார்த்தபேது உள்ளே தங்கம் வைரம் போன்ற விலையுருந்த பொருட்கள் இருந்தன.
சந்தோஷத்தின் எல்லைக்கு சென்ற சான்டியாகோ அந்த புதையலை எடுத்துகொண்டு தன் காதலியை பார்க்க விரைந்தான்...

பயணம் - ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் இருந்து ஆப்பிரிக்க கண்டம் கடந்து  எகிப்து பிரமீடுவை நோக்கி.

ரசவாதம் - என்பது முன்பு இருந்ததை விட சிறப்பாக மாறுவது. 
உலகின் எளிமையான விசியம் தான் மிக கடுமையான செயலாக இருக்கும். 

கதாபாத்திரம்

சான்டியாகோ,அரசன்,வியாபாரி, ஆங்கிலேயர், ரசவாதி 
4 comments:

  1. very good content.....
    please visit my blog also
    https://kidscricketcoaching.blogspot.com/2020/05/episode-14-back-foot-batting-drills.html

    ReplyDelete