Friday, 1 May 2020

தன்னை தானே செதுக்கிகொண்ட நாயகன்


அஜீத் இந்த மூன்றெழுத்து பெயரை தெரியாத நபர்களே தமிழ்நாட்டில் இல்லை. எம்.ஜீ.ஆர், சிவாஜு, ரஜினி, கமல் என்ற மூன்றெழுத்து மந்திர பெயர்களை தொடர்ந்து அஜீத் என்னும் ஆளுமை ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்தே ஆசை நாயகன், காதல்மன்னன், ஆணழகன், அல்டிமேட் ஸ்டார் என பல செல்ல பெயருக்கு சொந்தமானவர்.
தற்போது தல என்று ஒட்டுமொத்த ரசிகர்களாலும் அழைக்கபடுகிறார். தென்னகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட சில நடிகர்களில் இவரும் ஒருவர்.உச்ச நட்சந்திரங்களில் ஒருவராக இருந்தபோதும் தனது ரசிகர் மன்றத்தை களைக்க சொன்னவர்.தன்னுடைய படத்தை நேரம் கிடைத்தால் பார் என்றும் பேனர் மற்றும் பால் அபிஷேகம் போன்றவற்றை தவிர்க்க வேன்டும் என்று சொன்னவர்.எந்த ஒரு பொதுவிழாக்களிலும்,தன்னுடைய பட விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை.ஆனாலும் இவரின் பெயரும், படத்தின் வியாபாரமும் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
பள்ளி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு தன்னுடைய பாதை இதுதான் என்று மோட்டார் பந்தயத்தில் ஈடுபட மெக்கானிக் -யாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
ஏற்றுமதி நிறுவனத்தில் சிறிது காலம் வேலை செய்தபின் மோட்டார் பந்தயத்திற்கு போதுமான பணம் இல்லாததால் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார்.அதன்பின் 1993-ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்ற தெழுங்கு படத்தில் நாயகனாக நடிக்கதொடங்கி அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.இந்தபடம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தொடர்முயற்சியின் மூலம் 1995-ஆம் ஆண்டு ஆசை படமூலம் வெற்றி நாயகனாக மாறினார்.
அதற்கு பிறகு இவருடைய படங்கள் வெற்றி- தோல்வி என மாறி,மாறி அமைந்தாலும் இவருடைய தன்னம்பிக்கையும் ,விடாமுயற்ச்சியும் சிறிதும் மாறியதில்லை.
தன்னைபோல் வேறுயாராவது தோல்விபடங்களை கொடுத்திருந்தால் இன்நேரம் காணாமல் போய்யிருப்பார்கள் ஆனால் நான் இன்னும் நடிந்துகொண்டு இருக்கிறேன்.இதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்கள்தான் என்று ஒரு மேடையில் இவரே பேசியிருப்பார். ஆம் அது உண்மைதான் இவருடைய படம் தோல்வியென்றாலும் படத்திற்க்கு கிடைக்கும் வரவேற்ப்பும் ரசிகர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டேதான் போகிறது.அது சிறிதளவும் குறைந்தது இல்லை.


 ஆமராவதியில் தொடங்கி ஆசைநாயகனாக வளர்ந்து காதல் என்னும் கோட்டையில் மன்னனாக வளர்ந்து. தீனா திரைபடம் மூலம் தமிழ்நாட்டில் தல யாக திகழ்கிறார்.
      அமராவதியில் ஆரம்பித்து, தற்போது தன்னுடைய வலிமை மூலம் யாரும் அசைக்கமுடியாத இடத்தில் அமர்ந்துள்ளார்.

இந்த தன்னம்பிக்கையின் நாயகன்.. தல அஜீத் குமார் அவர்கள்..

No comments:

Post a comment