Monday, 20 April 2020

தற்போதிய சினிமா

தற்போது சினிமாவும் அதன் தொழில் நுட்பம் சார்ந்த கருவிகளும் பல மடங்கு முன்னேற்றம் அடைந்து விட்டது. அதேபோல் நம்முடைய படம் பார்க்கும் முறையும் மாறிகொண்டே வருகின்றன. தற்போது நம்முடைய கவனம் மெல்ல மெல்ல இணையதளம் பக்கம் நகர்ந்து கொண்டுஇருக்கிறது..
அதன் விளைவாக திரையரங்குகளில்  ஓடும் படங்களின் ஆயுள்காலம் குறைந்துகொன்டே வருகிறது.

  சில வருடங்களுக்கு முன்பெல்லாம் எந்த ஒரு நடிகரின் திரைபடமாக இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது திரையரங்கில் ஓடியது. பெரிய நடிகரின் படமென்றால் மாதகணக்கில் ஓடிகொண்டு இருக்குமாம். மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்ப்பது, பெண்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு தங்களின் குழந்தைகளுடன் பார்ப்பது. மீண்டும், மீண்டும் பார்ப்பது என அவர்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாகவும், அதே நேரத்தில்  ஒவ்வொரு திரைபடத்தையும் தங்களின் வாழ்க்கை பயணத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கு திரைப்படம் முக்கிய பங்கு வகித்தது. பெரிய நடிகரின் திரைபடம் என்றால் அவரது ரசிகர்கள் திரையரங்கை திருமண மண்டபம் போல் வண்ணமையமாக மாற்றிவிடுவார்கள். படம் பார்க்க வந்த மக்கள் எதோ கல்யாண வீட்டுக்கு வந்தது போல் மகிழ்ச்சியடைவார்கள்.
ஊர் திருவிழா போன்று மக்கள் அனைவரும் கூட்டமாக வந்து படத்தை பார்த்து ரசித்தன.
ஆனால் தற்போது மக்களிடையே  ஏற்பட்டுள்ள மாற்றமானது சினிமா என்பதை ஒரு ஆடம்பர செலவாக பார்க்கின்றன. அதற்கு ஏற்றார்போல் திரையரங்கு கட்டணமும் மக்களை வரவிடாமல் தடுக்கிறது. இதனால் சினிமா மீதான மோகம் மக்களிடையே குறைகிறது வருகிறது.
அடுத்த வரும்  சில வருடங்களில் வெளியாகும் அனைத்து  புதிய படங்களையும் வீட்டில் இருந்தபடியே எதோ சீரியலை போல் பார்க்கவேன்டிய சூழ்நிலை உருவாகலாம்.இதனால் சினிமா மட்டுமல்லாமல் அதனால் கிடைத்த மறக்கமுடியாத மகிழ்ச்சியும் அழியபோகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.இந்த நிலை மாற வேண்டும். பழையபடி மக்கள் தங்களின் பிரதான பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சிகான இடமாக இதை பார்த்து பார்க்கவேண்டும்.அதற்கு ஏற்றவாறு திரையரங்கமும்,சினிமா வட்டாரமும் தங்களின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கவேண்டும்.இல்லையென்றால் மக்கள் படங்களை பார்க்க இணையதளங்களுக்கு செல்வது என்பது படி படியாக அதிகரிக்கும்.  
அதுமட்டுமின்றி பெரிய நடிகருக்கு வரும் கூட்டம்,சின்ன படங்கள் நன்றாக இருந்தாலும் வருவதில்லை.அதையும் மீறி நல்ல படம் என்று மக்கள் பேசிகொன்டு வருவதற்குள் அந்த படம்
திரையரங்கை விட்டு எடுக்கபடுகிறது.இது தற்போது நடந்துகொண்டு இருக்கும் மறுக்கமுடியாத உண்மை...

1 comment: